/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு காணாமல் போய் விட்டது... கண்டுபிடித்து தாருங்கள்! மேல்சபையில் எதிர்க்கட்சி தலைவர் கடும் அதிருப்தி
/
அரசு காணாமல் போய் விட்டது... கண்டுபிடித்து தாருங்கள்! மேல்சபையில் எதிர்க்கட்சி தலைவர் கடும் அதிருப்தி
அரசு காணாமல் போய் விட்டது... கண்டுபிடித்து தாருங்கள்! மேல்சபையில் எதிர்க்கட்சி தலைவர் கடும் அதிருப்தி
அரசு காணாமல் போய் விட்டது... கண்டுபிடித்து தாருங்கள்! மேல்சபையில் எதிர்க்கட்சி தலைவர் கடும் அதிருப்தி
ADDED : டிச 18, 2025 07:10 AM
பெலகாவி: மேல்சபையில் கேள்வி நேரத்தின் போது, ஆளுங்கட்சி வரிசையில் வெறும் இரண்டு உறுப்பினர்கள் இருந்ததால், எதிர்க்கட்சிகள் அதிருப்தி அடைந்தனர்.
அரசு காணாமல் போய் விட்டது. கண்டுபிடித்து தாருங்கள் என, நாளிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி ஆவேசப்பட்டார்.
கர்நாடக மேல்சபை கேள்வி நேரம், கூட்டத்தொடரை மேல்சபை துணை தலைவர் பிரானேஷ் துவக்கினார். கேள்விகளை எழுப்ப உறுப்பினர்களுக்கு அனுமதி அளித்தார். அப்போது சபையில் ஆளுங்கட்சி வரிசையில், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியும், காங்கிரஸ் உறுப்பினர்கள் ராமோஜி கவுடா, சிவகுமார் மட்டுமே இருந்தனர். இதை பார்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அவமதிப்பு ம.ஜ.த., - போஜேகவுடா: அரசுக்கு சபையை நடத்துவதில் விருப்பம் உள்ளதா, இல்லையா என்பதே தெரியவில்லை. மேல்சபை தலைவர், காலை 10:00 மணிக்கு கூட்டத்தொடர் துவங்கும் என, கூறியிருந்தார். உறுப்பினர்களின் உரிமை மீறல் தொடர்பாக, அரசு எடுத்த நடவடிக்கை குறித்து, இந்த சபைக்கு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் சபையில் ஒரு அமைச்சரும், இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இது சபைக்கு செய்யும் அவமதிப்பாகும். சபை தலைவர் பீடத்தையும், அரசு அவமதிக்கிறது. இது பொறுப்பற்ற அரசு.
பா.ஜ., - ரவிகுமார்: அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மட்டும் இருக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி: அரசு பொறுப்பின்றி நடந்து கொள்வதை சகிக்க முடியாது, அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபைக்கு வராமல், காலம் கடத்துகிறது. காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவரும் இல்லை; உறுப்பினர்களும் இல்லை. அரசு மக்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது.
தேவையற்ற காரணங்களால், அரசு இப்படி நடந்து கொள்ள கூடாது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். வட மாவட்டங்களை அரசு அலட்சியப்படுத்துகிறது. அரசு காணாமல் போய் விட்டது. கண்டுபிடித்து தாருங்கள் என, பத்திரிகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
கோஷம் இந்த கட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இடையே, காரசாரமான வாக்குவாதம் நடந்தது. பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள், அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
கூட்டம் நடத்த முடியாததால், 10 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.

