/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மணமகன் தந்தை இறப்பு ரத்தானது திருமணம்
/
மணமகன் தந்தை இறப்பு ரத்தானது திருமணம்
ADDED : டிச 01, 2025 06:33 AM
ராய்ச்சூர்: மகனுக்கு திருமணம் நடக்கும் நாளன்றே, அவரது தந்தை மாரடைப்பால் இறந்ததால், திருமணம் ரத்து செய்யப்பட்டது.
ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனுார் தாலுகாவின் கங்காநகரில் வசித்தவர் சரணய்ய சுவாமி, 55. இவரது மகனுக்கு, சிந்தனுார் நகரின், ஜெயின் திருமண மண்டபத்தில் நேற்று திருமண ஏற்பாடுகள் நடந்தன.
மகனின் திருமணம் என்பதால், சரணய்ய சுவாமி உற்சாகத்துடன் மண்டபத்தில் அனைத்து பணிகளையும் செய்தார்.
நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, தாலி கட்ட முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது.
தாலி கட்ட இரண்டு மணி நேரம் இருந்த நிலையில், சரணய்ய சுவாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மணமகனின் தந்தை இறந்ததால், திருமணம் ரத்து செய்யப்பட்டது.

