தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ வரலாற்று சிறப்பு மிக்க மஸ்கி கிராமம்!

 வரலாற்று சிறப்பு மிக்க மஸ்கி கிராமம்!

 வரலாற்று சிறப்பு மிக்க மஸ்கி கிராமம்!


ADDED : செப் 17, 2026 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 03:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

வரலாற்றை விரும்பி படிப்பவர்களும், பழங்கால மன்னர்களின் கல்வெட்டுகளை பார்க்க ஆசைப்படுவோரும் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள சிறிய கிராமமான மஸ்கிக்கு கட்டாயம் செல்ல வேண்டும். இது, இந்தியாவின் மிக முக்கியமான தொல்லியல் இடங்களில் ஒன்றாகும்.

இந்த பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சி பணியில், பண்டைய கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், பேரரசர் அசோகர், ராஜேந்திர சோழன், மேலை சாளுக்கிய மன்னான இரண்டாம் ஜெயசிம்மன் குறித்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இங்கு துர்கத கட்டா எனும் குன்று உள்ளது. இந்த குன்றில், அசோகர் குறித்த கல்வெட்டுகளை நம்மால் காண முடியும். இதையடுத்து, துங்கபத்ராவின் கிளை நதியான மஸ்கி நதிக்கு செல்லலாம். இந்த நதியின் அழகை நாள் முழுதும் பார்த்து ரசிக்கலாம். மேலும், தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்த இடங்களை நேரில் சென்று பார்க்க அனுமதிக்கப்படுகிறது.

இங்கு செல்லும் போது குடை அல்லது தொப்பி எடுத்து செல்வது நல்லது. ஏனெனில், வெயில் அதிகமாக இருக்கும். இது, புகைப்படம் எடுக்க ஏற்ற இடம்.

எப்படி செல்வது? பஸ்: பெங்களூரிலிருந்து ராய்ச்சூர், 430 கி.மீ., தொலைவில் உள்ளது. ராய்ச்சூரிலிருந்து, 80 கி.மீ., தொலைவில் மஸ்கி உள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து, பஸ் மூலம் ராய்ச்சூரு பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து, பஸ் மூலம் மஸ்கியை அடையலாம். ரயில்: பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்திலிருந்து, ரயிலில் பயணிப்பதன் மூலம் ராய்ச்சூரு ரயில் நிலையம் வந்தடையலாம். அங்கிருந்து பஸ் மூலம் மஸ்கியை அடையலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us