/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமணம் செய்ய வற்புறுத்திய நர்ஸ் கழுத்தறுத்து கொன்ற காதலன்
/
திருமணம் செய்ய வற்புறுத்திய நர்ஸ் கழுத்தறுத்து கொன்ற காதலன்
திருமணம் செய்ய வற்புறுத்திய நர்ஸ் கழுத்தறுத்து கொன்ற காதலன்
திருமணம் செய்ய வற்புறுத்திய நர்ஸ் கழுத்தறுத்து கொன்ற காதலன்
ADDED : டிச 27, 2025 06:25 AM

குமாரசாமி லே -அவுட்: திருமணம் செய்ய வற்புறுத்தியதால், ஜெயதேவா மருத்துவமனை நர்சை கழுத்தறுத்து கொன்ற காதலன் கைது செய்யப்பட்டார்.
சித்ரதுர்காவின் ஹரியூரை சேர்ந்தவர் மம்தா, 39. திருமணமாகாத இவர், பெங்களூரு ஜெயதேவா மருத்துவமனையில் நர்சாக பணியாற்றினார். குமாரசாமி லே - அவுட் பிரகதிபுராவில், வாடகை வீட்டில் தன் தோழி ஸ்ருதியுடன் வசித்தார். மம்தாவும், மருத்துவமனையில் ஆண் நர்சாக வேலை செய்த ஹாசனை சேர்ந்த சுதாகரும், 31, கடந்த ஓராண்டாக காதலித்தனர். மம்தா தன்னை விட வயதில் மூத்தவர் என்பது, சுதாகருக்கு முதலில் தெரியவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் தான், இந்த விபரம் தெரியவந்தது. அதனால், மம்தாவுடன் பேசுவதை தவிர்த்தார். இதற்கிடையில், சுதாகருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தகம் நடந்தது. இந்த விஷயம் தெரிந்ததும் கடுப்பான மம்தா, சுதாகரிடம் சென்று, 'என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் உன் பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்வேன். உன்னையும், உன் குடும்பத்தையும் சிறையில் தள்ளாமல் விட மாட்டேன்' என்று மிரட்டியுள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த சுதாகர், மம்தாவை தீர்த்துக்கட்ட நினைத்தார். கடந்த 24ம் தேதி காலை, மம்தாவுடன் தங்கி இருந்த அவரது தோழி ஸ்ருதி சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு மம்தா வீட்டிற்கு சென்ற சுதாகர், மம்தாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பினார்.
நேற்று முன்தினம் மாலை வரை, வீட்டில் இருந்து மம்தா வெளியே வராததால், சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர், மம்தா வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
குமாரசாமி லே - அவுட் போலீசார் விசாரணையில், காதல் விவகாரத்தில் மம்தாவை சுதாகர் கொன்றது தெரிந்தது. ஹாசனில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

