/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சமூக ஊடகத்தில் வெளியானது 'மார்க்' திரைப்பட குழுவினர் கடும் அதிர்ச்சி
/
சமூக ஊடகத்தில் வெளியானது 'மார்க்' திரைப்பட குழுவினர் கடும் அதிர்ச்சி
சமூக ஊடகத்தில் வெளியானது 'மார்க்' திரைப்பட குழுவினர் கடும் அதிர்ச்சி
சமூக ஊடகத்தில் வெளியானது 'மார்க்' திரைப்பட குழுவினர் கடும் அதிர்ச்சி
ADDED : டிச 27, 2025 06:29 AM

பெங்களூரு: கிச்சா சுதீப்பின், மார்க் திரைப்படம் டெலிகிராம் சமூக ஊடகத்தில் வெளியானதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் நடிகர்கள் கிச்சா சுதீப், தர்ஷன் ஆகிய இருவருக்கும் அதிகளவு ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி, சமூக வலைதளங்களில் அடிக்கடி சண்டையிட்டு கொள்வர்.
அதேபோல, மார்க் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியில், படத்தின் கதை குறித்து கிச்சா சுதீப் பேசினார். அந்தப் பேச்சில் ஒரு பகுதி, சிறையில் உள்ள தர்ஷனையும், அவரது ரசிகர்களையும் கேலி செய்யும் விதமாக இருந்ததாக, சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின. இதையடுத்து, இருவரின் ரசிகர்களும் மோசமான வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கிச்சா சுதீப்பின் மார்க் படம் நேற்று முன்தினம் வெளியாகியது. இந்த படம், 40 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது. உலக அளவில் 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதனிடையே, நேற்று மார்க் படம் நல்ல தரத்தில் டெலிகிராம் சமூக ஊடகத்தில் வெளியானது.
இது, படக்குழுவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படத்தின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அஞ்சுகின்றனர். இந்த செயலுக்கு பின்னால் தர்ஷன் ரசிகர்களின் கைவரிசை இருப்பதாக, சமூக வலைதளங்களில் சுதீப்பின் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி சண்டையிட்டு வருகின்றனர்.

