தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பிரமிக்க வைக்கும் கைவாரா தேசிய பூங்கா

 பிரமிக்க வைக்கும் கைவாரா தேசிய பூங்கா

 பிரமிக்க வைக்கும் கைவாரா தேசிய பூங்கா


UPDATED : மார் 05, 2026 06:14 AM

ADDED : மார் 05, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2026 06:14 AM ADDED : மார் 05, 2026 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூரின் சிந்தாமணி தாலுகா கைவாரா கிராமத்தில் உள்ளது கைலாசகிரி மலை. இந்த மலையின் அடிவாரத்தில் கைவாரா தேசிய பூங்கா உள்ளது. மான்கள், முயல்கள், மயில்கள், குரங்குகளின் புகலிடமாக இந்த பூங்கா விளங்குகிறது .

பச்சை, பசலேன காட்சி அளிக்கும் வனப்பகுதிக்குள் கூண்டுகள் அமைத்து மான்கள், முயல்களை அதற்குள் விட்டு உள்ளனர். கூண்டிற்குள் மான்களும், முயல்களும் துள்ளி குதித்து ஓடுவதும், செல்லமாக சண்டையிட்டு கொள்வதும் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்கின்றன.



மான்களுக்கு புல்களும், முயல்களுக்கு வாழைப்பழங்களும் கொடுக்க சுற்றுலா பயணியருக்கு அனுமதி உள்ளது. தங்கள் கையால் மான்கள், முயல்களுக்கு குழந்தைகள் உணவு கொடுக்கும் போது, அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. இங்கு பல ரக கிளிகள், பறவைகளையும் கண்டு ரசிக்கலாம்.

புகைப்பட பிரியர்களுக்கு இந் த இடம் மிகவும் ஏற்றதாக உள்ளது.

பறவைகள், முயல்கள், மான்களை பார்த்து விட்டு குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடும் வகையில் மைதான வசதியும் உள்ளது.

மொத்தம், 1,500 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இங்த பூங்கா, பிரம்மிக்க வைக்கும் நிலப்பரப்புகள், பல தாவரங்கள், விலங்கினங்களுக்கு தாயமாக உள்ளது. பூங்காவில் இருந்து மலையேற்றம் மேற்கொள்ளவும் பாதை உள்ளது.

கலாசார வரலாற்றில் இடம் பிடித்து உள்ள கைவாராவில் பழங்கால கோவில்களும் உள்ளன.

பூங்காவை சுற்றி பார்த்து விட்டு கோவில்களுக்கு சென்று திரும்பலாம். ஒட்டுமொத்தமாக நகர வாழ்க்கையில் இருந்து, ஒரு நாள் முழுதும் தப்பிக்க ஏற்ற இடமாக உள்ளது.

பூங்காவை சுற்றி பார்க்க ஒரு நபருக்கு, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மலையேற்றம் செல்வதாக இருந்தால் 250 ரூபாய் கட்டணம்.

காலை 9:00 மணியில் இருந்து மாலை 5:00 மணி வரை, பூங்கா திறந்து இருக்கும்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us