/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'சில்மிஷம்' செய்தவரை பிச்சை எடுக்க வைத்த பெண்
/
'சில்மிஷம்' செய்தவரை பிச்சை எடுக்க வைத்த பெண்
ADDED : ஏப் 19, 2025 11:12 PM

பல்லாரி: குடும்பத்தினருடன் ஆடைகள் எடுக்க வந்த பெண்ணிடம், சில்மிஷம் செய்த நபரை சரமாரியாக தாக்கி, பிச்சை எடுக்க வைத்த வீடியோ பரவி வருகிறது.
பல்லாரி நகரில் உள்ள மார்க்கெட்டிற்கு நேற்று இளம்பெண் ஒருவர், தன் குடும்பத்தினருடன் ஆடை எடுக்க வந்திருந்தார். சாலையில் குடும்பத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்களை பின்தொடர்ந்த வாலிபர் ஒருவர், இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்தார்.
ஆரம்பத்தில் இளம்பெண் பொறுத்துக் கொண்டார். தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் பொறுமை இழந்த அவர், தன் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
கோபமடைந்த குடும்பத்தினர், அவரை சரமாரியாக தாக்கினர். இதைப் பார்த்த அப்பகுதியினரும் தாக்கினர். பின், அவரை அங்கேயே பிச்சை எடுக்க வைத்தனர். அங்கிருந்தோர், அந்நபரை திட்டி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசில் எந்த புகாரும் பதிவாகவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
அநாகரீகமாக நடந்துகொண்ட நபரை தாக்கிய இளம்பெண்ணின் தாய்.

