ADDED : நவ 01, 2025 04:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலார்: உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில், அரசு நிதி உதவி செய்யாத விரக்தியில், விருதுகளை தீவைத்து எழுத்தாளர் எரித்தார்.
கோலாரின் மாலுாரை சேர்ந்த மூத்த எழுத்தாளர் ஹரிஹரபிரியா. கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ செலவுகளை செலுத்த கோரி கன்னட மேம்பாட்டு ஆணையம், கோலார் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு பதில் வரவில்லை.
விரக்தி அடைந்த ஹரிஹரபிரியா, தனக்கு கிடைத்த கன்னட ராஜ்யோத்சவா, ராஷ்ட்ரகவி குவெம்பு பிரபிரதம், கெம்பேகவுடா, கர்நாடக கலாசார துாதர் ஆகிய விருதுகளை, வீட்டின் முன்பு சாலையில் போட்டு தீ வைத்து எரித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் சித்தரா மையாவுக்கு, கன்னட மற்றும் கலாசார அமைச்சர் சிவராஜ் தங்கடகி கடிதம் எழுதி உள் ளார்.

