/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காதலிக்கு செலவு செய்ய திருட்டு: கூட்டாளியுடன் வாலிபர் கைது
/
காதலிக்கு செலவு செய்ய திருட்டு: கூட்டாளியுடன் வாலிபர் கைது
காதலிக்கு செலவு செய்ய திருட்டு: கூட்டாளியுடன் வாலிபர் கைது
காதலிக்கு செலவு செய்ய திருட்டு: கூட்டாளியுடன் வாலிபர் கைது
ADDED : டிச 05, 2025 08:53 AM
கலபுரகி: தன் காதலிக்கு செலவு செய்யும் நோக்கில், வீடுகளில் திருடிய வாலிபர் உட்பட, இருவர் கைது செய்யப்பட்டனர்.
கலபுரகி நகர போலீஸ் கமிஷனர் சரணப்பா, நேற்று அளித்த பேட்டி:
கலபுரகி மாவட்டம், அப்ஜல்புரா தாலுகாவின், கவுர் கிராமத்தில் வசிப்பவர் கல்லப்பா, 24. இவர் கூலி வேலை செய்கிறார். இவர் இளம் பெண்ணை காதலித்து, அவருடன், 'லிவிங் இன் ரிலேஷன்ஷிப்'பில் இருந்தார்.
காதலிக்கு செலவிடவும், குடும்பத்தை நிர்வகிக்கவும் பணம் போதாமல் பிக்பாக்கெட் திருட்டில் ஈடுபட்டார். செலவு அதிகமானதால் வீடுகளில் புகுந்து திருட துவங்கினார். கூலி வேலை உள்ளதாக கூறி பெண்களை ஆட்டோவில் அழைத்து சென்று, அவர்கள் அணிந்துள்ள நகைகளை பறித்து கொண்டு தப்பியோடுவார். இவரது திருட்டுக்கு சந்தோஷ் பூஜாரி, 30, என்பவர் உடந்தையாக இருந்தார்.
நவம்பர் 22ம் தேதி, கூலி வேலைக்காக சுனிதா என்பவரை அழைத்து சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 3 கிராம் எடையுள்ள தாலிச்செயினை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்து, சுனிதா கொடுத்த புகாரின்படி, விசாரணை நடத்திய போலீசார், கல்லப்பாவையும், சந்தோஷ் பூஜாரியையும் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 61 கிராம் தங்கம், 680 கிராம் வெள்ளி பொருட்கள் உட்பட, 7.62 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.

