ADDED : பிப் 08, 2026 05:26 AM

தேவனஹள்ளி: கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மூவர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், நேற்று அதிகாலை விமானத்தில் வந்திறங்கிய மூன்று பயணியரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்தன. இதை கவனித்த சுங்கத்துறை அதிகாரிகள், மூன்று பயணியரின் லக்கேஜ்களையும் சோதனையிட்ட போது, அவற்றில் உயர்ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது.
மொத்தம், 8.5 கிலோ எடையிருந்த, 2.97 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை சிறு, சிறு பாக்கெட்டுகளாக்கி கடத்தி வந்த மூவரையும் விசாரித்த போது, அவர்கள் தாய்லாந்தின், புக்கெட் மற்றும் மலேஷியாவில் இருந்து வந்தது தெரியவந்தது. மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
