/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் மூவர் பலி
/
நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் மூவர் பலி
நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் மூவர் பலி
நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் மூவர் பலி
ADDED : மே 30, 2025 11:13 PM

தார்வாட்:தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில், காரில் சென்ற மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தார்வாட், அன்னிகேரி தாலுகா, பத்ராபூர் பகுதியில் கதக்கிலிருந்து ஹூப்பள்ளி நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 63ன் ஓரத்தில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
நேற்று காலை, ஹூப்பள்ளியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில், காரின் முன்பகுதி சுக்குநுாறாக நொறுங்கியது. காரில் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை பார்த்த வாகன ஓட்டிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அன்னிகேரி போலீசார், கிரேன் உதவியுடன் காரை மீட்டனர்.
விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் பெங்களூரை சேர்ந்த சுரேஷ், 60, மைசூரை சேர்ந்த சுரேஷ், 60, மதன், 61, என்பது தெரிய வந்தது. இவர்கள் கதக் மாவட்டம், முண்டராகி பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
நேற்று வயலில் வேலையை முடித்துவிட்டு, பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக நடந்த வழக்கில், மூன்று பேரும் இறந்தனர்.