தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லாரி மீது கார் மோதி மூவர் உயிரிழப்பு

 லாரி மீது கார் மோதி மூவர் உயிரிழப்பு

 லாரி மீது கார் மோதி மூவர் உயிரிழப்பு


ADDED : பிப் 28, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சித்ரதுர்கா: நின்றிருந்த லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில், மூவர் உயிரிழந்தனர்

சித்ரதுர்கா மாவட்டம், செல்லகெரே தாலுகாவின், ஹிரேஹள்ளி கிராமம் அருகே, நேற்று காலை அதி வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதியது. காரில் இருந்த நரசிம்ம மூர்த்தி, 38, கங்காதர், 35, லோஹித், 40, ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்தில் இறந்தவர்கள், துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா, ஹொசகெரே கிராமத்தை சேர்ந்தவர்கள். காரில் மந்த்ராலயாவுக்கு சென்ற இவர்கள், ராகவேந்திர சுவாமியை தரிசனம் செய்த பின், ஊருக்கு திரும்பும் போது விபத்து நடந்துள்ளது. இந்த விபத்துக்கு கார் ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என்று கூறப்படுகிறது.

தகவல் அறிந்து அங்கு வந்த செல்லகெரே போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்தை எஸ்.பி., ரஞ்சித் குமார் பண்டாரு நேரில் பார்வையிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us