ADDED : ஜூன் 14, 2026 05:05 AM
ஆன்மிகம்
வைகாசி அமாவாசை
வைகாசி மாத அமாவாசையை ஒட்டி, சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 4:00 மணி; மலர் அலங்காரம் - 8:00 மணி; மஹா மங்களாரத்தி - 9:00 மணி; ஊஞ்சல் சேவை - 11:00 மணி; மஹா மங்களாரத்தி - மதியம் 1:00 மணி; அன்னதானம் - 1:30 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். தொடர்புக்கு: 98445 15555 - எஸ்.எம்.வேலு
அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் - காலை 5:00 மணி; கலசம், விளக்கு, வேள்வி பூஜை, அமாவாசை ஹோமம், பக்தர்களுக்கு பிரசாதம் - மாலை 6:00 மணி. இடம்: ஆதிபராசக்தி சக்தி பீட கோவில், ஜீவன் பீமா நகர். தொடர்புக்கு: 88926 83899 - எல்.வி.நாராயணப்பா.
சிறப்பு அபிஷேகம் - காலை 8:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 11:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர். தொடர்புக்கு: 93432 11122 - நாகேந்திர பிரசாத்.
அபிஷேகம் - 7:00 மணி; மஹா மங்களரத்தி - 9:00 மணி; காளி பூஜை - மதியம் 12:00 மணி; பிரத்யங்கிரா ஹோமம் - மாலை 6:30 மணி; அபிஷேகம் - இரவு 9:00 மணி; அலங்காரம் - நள்ளிரவு 12:00 மணி. இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், மாகடி சாலை. தொடர்புக்கு: 93437 37609 - வெங்கடேஷ்.
வேம்பு அம்மன், வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் - காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை; பக்தர்களுக்கு தாயத்து கட்டுதல், திருஷ்டி கழித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வராஹி அம்மன் தேவி கோவில், 6 வது கிராஸ், கே.பி., அக்ரஹாரா, பெங்களூரு. தொடர்புக்கு: 98452 25923 - சுரேஷ்.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பெருவிழா
துாய இருதய ஆண்டவர் தேவாலயம் பெருவிழாவை ஒட்டி, கன்னட திருப்பலி - காலை 6:00, மதியம் 2:00 மணி; தமிழ் திருப்பலி - காலை 7:15, 8:30, மதியம் 1:15 மணி; ஆங்கில திருப்பலி - காலை 9:45, 11:00 மணி; மலையாளம் திருப்பலி - மதியம் 3:00 மணி; துாய இருதய ஆண்டவர் தேர் பவனி - மாலை 5:30 மணி; தமிழில் நன்றி திருப்பலி - இரவு 8:30 மணி. இடம்: துாய இருதய ஆண்டவர் தேவாலயம், ரிச்மண்ட் சாலை, பெங்களூரு.
பொது
மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி
தோட்டக்கலை துறை சார்பில் பாம்பழம், பலாப்பழம் கண்காட்சி - காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: லால்பாக் தாவரியல் பூங்கா, பெங்களூரு.
யோகா
கேசவா சேவா சமிதி சார்பில் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, 5ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு, கல்லுாரி மாணவர்களுக்கு யோகா போட்டியும், 8 முதல் கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டியும், பி.யு.சி., கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டியும் நடக்கிறது - காலை 7:00 மணி. இடம்: சின்மயா வித்யாலயா பள்ளி, செயின்ட் ஜான்ஸ் சாலை, சிவன் ஷெட்டி கார்டன்.
ஆயுர்வேத முகாம்
ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேதம் மருத்துவமனை சார்பில் அக்குபஞ்சர் சிகிச்சை, கழுத்து, முதுகு வலிக்கு யோகா சிகிச்சை - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு 0821 - 2548 231, மொபைல்: 96320 00697.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இல வச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
