ADDED : ஆக 13, 2026 11:19 PM
ஆன்மிகம்
பிரம்ம ரத உத்சவம்
ஸ்ரீ நாகம்மா தேவி 34ம் ஆண்டு பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, வேப்பிலை கரகம், பொங்கல் சேவை - காலை 9:00 மணி; அன்னதானம் - மதியம் 12:30 மணி; மாவிளக்கு சேவை, கலை நிகழ்ச்சிகள் - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு.
மஹா சண்டி ஹோமம்
ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவிலில், ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஆடிப்பூர மஹா சண்டி ஹோமத்தை ஒட்டி, யாகசாலை பூஜை, பாராயணம், துர்கா சப்தசதி, 13 அத்யாய ஹோமம், கன்யா சுவாசினி வடுக பிரம்சாரி பூஜை, மங்கள திரவிய சமர்ப்பணம், வசோத்தாரா, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, கலசம் புறப்பாடு, ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி அம்பிகைக்கு அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்கல் - காலை 6:30 மணிக்கு ஆரம்பம் இடம்: ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர்.
ஆடிப்பூர விழா
ஆடிப்பூரத்தை ஒட்டி, விசாலாட்சி க்கு சீமந்த உத்சவம் - காலை 10:15 முதல் மதியம் 12:00 மணி வ ரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.
குரு பிரார்த்தனை, சங்கல்பம், கணபதி பூஜை, புண்யாக வச்சனம், கலச ஸ்தாபனம் - காலை 8:00 மணி; மஹா காளி, மஹா சரஸ்வதி, மஹா லட்சுமி ேஹாமங்கள், பூர்ணாஹுதி - காலை 10:00 மணி; அஷ்டோத்தர கலச அபிேஷகம் - காலை 10.30 மணி, மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத விநியோகம், அன்னதானம் - பகல் 12,30 மணி இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜிநகர்.
ஆடி திருவிழா
காளியம்மனுக்கு பச்சை அம்மன் அலங்காரம் - காலை 7:30 மணி. இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு.
ஆடிக்கரக திருவிழாவை ஒட்டி, அபிேஷகம் - அதிகாலை 4:00 மணி, வளையல் அலங்காரம் - காலை 7:00 மணி, மஹா மங்களாரத்தி - காலை 8:30 மணி, பிரசாதம் வழங்கல் - காலை 9;00 மணி; புஷ்ப பல்லக்கை ஆனந்த்குமார் எடுக்கிறார் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.
அபிஷேகம், சாத்துமுறை, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - காலை 7:30 முதல் 8:30 மணி வரை; பிரபந்த சேவை காலம், சாத்துமுறை, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பான்பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணாமந்திர், பஜார் தெரு, ஹலசூரு.
ஓம் சக்தி கோவில் 41ம் ஆண்டு ஆடிப்பூரம் திருவிழாவை ஒட்டி, சக்தி கொடி ஏற்றுதல், காப்பு கட்டுதல் - காலை 6:00 மணி; ஓம் சக்தி அம்மன், பிரத்யங்கிரா தேவிக்கு பாலாபிஷேகம், இனிப்பு, அன்னதானம் வழங்கல் - 7:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஓம் சக்தி கோவில், ஷெப்பிங்ஸ் சாலை, சிவாஜி நகர்.
ஸ்ரீ ஆண்டாள் தாயார் ஜெயந்தி மஹோத்சவத்தை ஒட்டி, அபிஷேகம் - காலை 9:00 மணி; மஹா மங்களாரத்தி - நண்பகல் 12:00 மணி; ஊஞ்சல் உத்சவம் - இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 9:00 மணி. இடம்: ஸ்ரீ ஆண்டாள் சன்னிதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு.
ஆடித்திருவிழாவை ஒட்டி, ஸ்ரீ படவேட்டம்மன் உற்சவர், முத்து பல்லக்கு மூலம் அலங்கரித்து, பல்வேறு கிராமிய கலை நகழ்ச்சிகளுடன் ஊர்வலம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர்.
அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை - காலை: 9:00 மணி. கரக பவனி, கூழ் வார்த்தல், கும்பம் படைத்தல். மகா தீபாராதனை- -- மதியம் 12:30 மணி - அம்மன் தேர் பவனி - இரவு 8:00 மணி, இடம்: முத்து மாரியம்மன் கோவில், ஓரியண்டல் வட்டம், கோரமண்டல், தங்கவயல்.
சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாராதனை, தீர்த்த பிரசாத விநியோகம் --- காலை 8:00 மணி. இடம்:ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில், கிங் ஜார்ஜ் அரங்க வளாகம், ராபர் ட்சன்பேட்டை.
அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜைகள்- - காலை 9:00 மணி முதல். அன்னதானம் -- பகல் 1:00 மணி; விசேஷ பூஜை, மஹா மங்களாரத்தி- - மாலை 6:00 மணி. இடம்: ஆதி சக்தி மாரியம்மன் கோவில் ராபர்ட்சன்பேட்டை 4 வது பிளாக்.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை- - காலை 8:00 மணி; சிறப்பு பூஜைகள், மஹா மங்களாரத்தி - இரவு: 7:00 மணி. இடம்: முத்துமாரியம்மன் கோவில், என்.டி.பிளாக், வாட்ச்மேன் லைன், உரிகம், தங்கவயல்.
கொடி ஏற்றல், சிறப்பு பூஜைகள், அம்மன் அலங்காரம், காப்பு கட்டுதல் -- இரவு 7:00 மணி. இடம்: முத்து மாரியம்மன் கோவில், கார்னேஷன் டவுன், ராபர்ட்சன்பேட்டை.
பால் கலச ஊர்வலம்
ஓம் சக்தி கோவில் 35ம் ஆண்டு விழாவை ஒட்டி, 2,007 பால் கலச ஊர்வலம், சிறப்பு அலங்காரம், மஹா மங்களாரத்தி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல் - காலை 7:15 மணி. இடம்: ஸ்ரீ ஓம் சக்தி கோவில், கல்யாண் நகர். தொடர்புக்கு 90353 73797.
ஆதிபராசக்தி சக்தி பீடம் கோவில் 43ம் ஆண்டு விழாவை ஒட்டி, கங்கன பூஜை, மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ ஆதிபராசக்தி சக்தி பீடம் கோவில், ஜீவன் பீமா நகர்.
மண்டல பூஜை
ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதி யம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.
பொது
மலர் கண்காட்சி
சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில் 12 நாட்கள் நடக்கும் மலர் க ண்காட்சி துவக்கம். - காலை 9:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை.
