ADDED : ஆக 16, 2026 11:05 PM
ஆன்மிகம்
வசந்தோத்சவம் கரகம்
ஸ்ரீ நாகம்மா தேவி 34ம் ஆண்டு பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, வசந்தோத்சவம் கரகம் - மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
ஆடி திருவிழா
ஆடி திருவிழாவை ஒட்டி, சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன் வீதி உலா, தீ மிதி திருவிழா, பக்தர்கள் தீ சட்டி ஏந்தி வருதல், கூழ்வார்த்தல், வேப்பிலை கரகம், அன்னதானம் - மாலை 5:00 மணி முதல். இடம்: ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில், ஓக்லிபுரம்.
43 வது ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு ஓம் சக்தி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மஹா மங்களாரத்தி - காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீ ஆதிபராசக்தி சக்தி பீடம் கோவில், ஜீவன் பீமா நகர்.
பொது
விற்பனை, கண்காட்சி
சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.
மலர் கண்காட்சி
சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில் 12 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி துவக்கம். - காலை 9:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை.
ஆயுர்வேத முகாம்
காவேரி ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் முதுகுவலி, பருவமழை காய்ச்சல், தெற்றுக்கு இலவச பரிசோதனை - காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், தேவகவுடா சதுக்கம், கே.பி.எல்., லே - அவுட், மைசூரு. தொடர்புக்கு 97317 99317.
