ADDED : ஆக 20, 2026 11:51 PM
ஆன்மிகம்
வரமஹாலட்சுமி விரதம்
வரமஹாலட்சுமி விரதத்தை ஒட்டி, பெங்களூரு நகரின் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகள் நடக்கின்றன. அபிஷேகம் - 8:30 மணி; பூஜைகள் - 10:30 மணி; தீபாராதனை - 11:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.
கலச ஸ்தாபனை - காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.
சிறப்பு பூஜைகள் - இரவு 7:00; அலங்காரம், பிரசாதம் வழங்கல் - 7:30 மணி. இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், வண்ணாரபேட்டை பஸ் நிலையம், விவேக் நகர்.
சிறப்பு அபிஷேகம் - காலை 6:00 மணி; அலங்காரம் - 9:00 மணி. இடம்: ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், லக்கசந்திரா.
ஆண்டு விழா
ஆதிபராசக்தி சக்தி சக்தி பீடம் கோவில், 43ம் ஆண்டு விழாவை ஒட்டி, வரமஹாலட்சுமி திருவிழாவை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பக்தர்களுக்கு அன்னதானம் - மதியம் 12:00 மணி. இடம்: ஸ்ரீ ஆதிபராசக்தி சக்தி சக்தி பீடம் கோவில், ஜீவன் பீமா நகர்.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
புகைப்பட கண்காட்சி
பெங்களூரு போட்டோ ஜெர்னலிஸ்ட் சங்கம் சார்பில் உலக புகைப்பட தினத்தை ஒட்டி 'பிரோசன் மெமரீஸ்' புகைப்பட கண்காட்சி - காலை 9:00 மணி. இடம்: சித்ரகலா பரிஷத், பெங்களூரு.
விற்பனை, கண்காட்சி
சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.
ஆயுர்வேத முகாம்
காவேரி ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் முதுகுவலி, பருவமழை காய்ச்சல், தெற்றுக்கு இலவச பரிசோதனை - காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், தேவகவுடா சதுக்கம், கே.பி.எல்., லே - அவுட், மைசூரு. தொடர்புக்கு 97317 99317.
நாடக பயிற்சி முகாம்
கவுதமா கல்வி மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை சார்பில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத காலம் நாட்டுப்புறவியல், இசை, நாடக பயிற்சி முகாம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: ரங்காயன வளாகம், பி.வி.காரந்த், மைசூரு. தொடர்புக்கு 96320 73716, 76187 39343.
கண்காட்சி
பெங்களூரில் உள்ள இத்தாலியின் துணை துாதரகமும், தேசிய கலைக்கூடமும் இணைந்து 'ஒரு தாய் பல தாய் மொழிகள்' என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 'ஓவியங்கள், சிலைகள்' கண்காட்சி - செவ்வாய் மு தல் வெள்ளி வரை, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை; சனிக்கிழமை, ஞாயிறுகளில் காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தேசிய கலைக்கூடம், பெங்களூரு. தொடர்புக்கு ngma.bengaluru@gmail.com
