ADDED : ஆக 26, 2026 02:52 AM
ஆன்மிகம்
பூணுால் பண்டிகை
கன்னட தேவாங்க சமூகத்தினரின் பூணுால் பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீ விக்னேஸ்வரி பூஜை, புண்யாஹவசனம், குலகுரு தேவல மகரிஷி பூஜை, குலதேவதை ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி பூஜை, கணபதி ஹோமம், ஸ்ரீ சவுடேஸ்வரி மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி - காலை 9:00 மணி; ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு நைவேத்ய பூஜை, தேவாங்க சமூகத்தினரால் பூணுால் தாரணை - 10:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 11:45 மணி. இடம்: ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், லக்கசந்திரா.
நடராஜர் அபிஷேகம்
ஸ்ரீ நடராஜருக்கு ஆவணி மாத அபிஷேகம் - மாலை 6:00 மணி; அலங்காரம், பூஜை, பிரசாதம் வழங்கல் - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
விற்பனை, கண்காட்சி
சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.
நாடக பயிற்சி முகாம்
கவுதமா கல்வி மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை சார்பில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத காலம் நாட்டுப்புறவியல், இசை, நாடக பயிற்சி முகாம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: ரங்காயன வளாகம், பி.வி.காரந்த், மைசூரு. தொடர்புக்கு 96320 73716, 76187 39343.
கண்காட்சி
பெங்களூரில் உள்ள இத்தாலியின் துணை துாதரகமும், தேசிய கலைக்கூடமும் இணைந்து 'ஒரு தாய் பல தாய் மொழிகள்' என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 'ஓவியங்கள், சிலைகள்' கண்காட்சி - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை; சனிக்கிழமை, ஞாயிறுகளில் காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தேசிய கலைக்கூடம், பெங்களூரு. தொடர்புக்கு ngma.bengaluru@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இசை
கன்னடா ஜாமிங் - இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
கரோக்கி லைவ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.
ஓணம் நைட் - இரவு 8:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: பட் பீ ரெஸ்டோ பார், 65, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
ஓணம் பஷ் பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: பனாசியா லாஞ்சு அண்ட் ரெஸ்டோ பார், 35, இரண்டாவது தளம், மாரத்தஹள்ளி.
காமெடி
வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
மிட் நைட் காமெடி ஷோ - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.
