ADDED : செப் 13, 2026 11:13 PM
ஆன்மிகம்
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, நகரின் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடக்கின்றன. சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், மலர் அலங்காரம் - அதிகாலை 5:00 மணி; தரிசனம் - காலை 8:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: ஸ்ரீ லேக்வியூ மஹா கணபதி கோவில், டாங்க் சாலை, ஹலசூ ஏரி அருகில்.
ஸ்ரீ வஞ்சகல்ப மஹா கணபதி ஹோமம், 108 சங்கு ஸ்தாபனம், 108 கரும்பு, 108 வெல்லம், 108 திர்வியம் ஆஹதி - மாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ தண்டாயுதபானி கோவில், கங்காதர செட்டி, ஹலசூரு.
மஹா கணபதி ஹோமம் - காலை 6:30 மணி; மஹா அபிஷேகம் - 8:00 மணி; மஹா மங்களாரத்தி - 9:30 மணி; உற்சவர் அபிஷேகம் - 10:00 மணி; விநாயகர் ஊர்வலம் - 11:00 மணி; சந்தன அலங்காரம் - மாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:30 மணி. இடம்: ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில், காக்ஸ்டவுன்.
அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா படையல், தீபாராதனை, பிரசாத வினியோகம் - காலை 10:00 மணி. இடம்: கணபதி கோவில், கணேஷ்புரம், ராபர்ட சன் பேட்டை.
சந்தன அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, சிறப்பு பூஜைகள், மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். மாலை 6:00 மணி. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், ஈ.டி. பிளாக், உரிகம், தங்கவயல்.
பாலாபிஷேகம், அலங்காரம், படையல், தீபாராதனை, பிரசாத வினியோகம்- மாலை 7:00 மணி. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், மருத்துவமனை டாக்டர்கள் காம்பவுண்ட், ராபர்ட்சன்பேட்டை.
அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரசாத வினியோகம். மாலை 6:30 மணி. இடம்: கன்னிகாபரமேஸ்வரி கோவில், 2வது கிராஸ், ராபர்ட்சன்பேட்டை.
பொது
பள்ளிகள் இடையே போட்டி
டா க்டர் எம்.வி.கோபாலசுவாமி நினைவு பள்ளிகள் இடையேயான போட்டி. மாறுவேட போட்டி, ஓவியம், செய்தித்தாள் வாசிப்பு, பகவத் கீதை பாராயணம் - காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை. இடம்: கோபாலசுவாமி உயர்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம், மைசூரு.
விற்பனை, கண்காட்சி
சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்டு கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.
நாடக பயிற்சி முகாம்
கவுதமா கல்வி மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை சார்பில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத காலம் நாட்டுப்புறவியல், இசை, நாடக பயிற்சி முகாம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை; மறையுரை, கொடியேற்றம் - மாலை 5:30 மணி; நற்கருணை ஆசிர் - 6:30 மணி. இடம்: ரங்காயன வளாகம், பி.வி.காரந்த், மைசூரு. தொடர்புக்கு 96320 73716, 76187 39343.
கண்காட்சி
பெங்களூரில் உள்ள இத்தாலியின் துணை துாதரகமும், தேசிய கலைக்கூடமும் இணைந்து 'ஒரு தாய் பல தாய் மொழிகள்' என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஓவியங்கள், சிலைகள் கண்காட்சி - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை; சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தேசிய கலைக்கூடம், பெங்களூரு. தொடர்புக்கு ngma.bengaluru@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
