ADDED : ஆக 11, 2026 08:12 PM
ஆன்மிகம்
பிரம்ம ரத உத்சவம்
ஸ்ரீ நாகம்மா தேவி 34ம் ஆண்டு பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, நவ சண்டிகா பாராயணம், நவ சண்டிகா ஹோமம், சுவாசினி பூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, தம்பதி பூஜை, பூர்ணாஹூதி, மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு. தொடர்புக்கு: 99809 05225.
ஆடி திருவிழா
ஆடி திருவிழாவை ஒட்டி, நகரின் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. கோவில் நடை திறப்பு - அதிகாலை 4:00 மணி: தஞ்சாவூர் கரகம் மஹோத்சவம் வீதியுலா வருதல், கரகம் எடுப்பவர் பி.வேலாயுதம், - காலை 10:30 மணி; திருவாரூர் மாவட்ட கலைஞர்கள் நடனம் - மாலை 6:00 முதல் 9.00 மணி வரை; அம்மனுக்கு எஸ்.யோகலிங்கம் சிறப்பு பூஜைகள், மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர். தொடர்புக்கு: 83106 89632.
சிறப்பு அபிஷேகம் - காலை 8:30 மணி; அமாவாசை பூஜை, திருவிழா பூஜைகள், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - முற்பகல் 11:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர். தொடர்புக்கு: 93432 11122
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசையை ஒட்டி, நகரின் பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 4:00 மணி; மலர் அலங்காரம் - 7:00 மணி; மஹா மங்களாரத்தி - 8:00 மணி; உற்சவர் ஊஞ்சல் சேவை, பம்பை உடுக்கையுடன் பக்தி பாடல்கள் - மதியம் 12:00 மணி; மஹா மங்களாரத்தி - 1:00 மணி; அன்னதானம் - 1:30 மணி; பம்பை உடுக்கையுடன் அங்காள அம்மன் தாலாட்டு -மதியம் 2:30 மணி; சக்தி கரகம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். தொடர்புக்கு: 98445 15555
சுப பிரம்மச்சாரி ஹோமம், நாக தோஷ நிவாரண ஹோமம், கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், சுப்ரமண்ய ஹோமம், தன்வந்த்ரி ஹோமம் - காலை 9:00 மணி. இடம்: ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், மல்லேஸ்வரம்.
அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் - காலை 5:00 மணி; கலசம், விளக்கு, வேள்வி பூஜை, அமாவாசை ஹோமம், பக்தர்களுக்கு பிரசாதம் - மாலை 6:00 மணி. இடம்: ஆதிபராசக்தி சக்தி பீட கோவில், ஜீவன் பீமா நகர். தொடர்புக்கு: 88926 83899
ஓம் சக்தி அம்மன், பிரத்யங்கிரா தேவி, வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி; கணபதி, நவக்கிரஹ ஹோமம் - காலை 10.00 மணி; மஹாமங்களாரத்தி, அன்னதானம் - மதியம் 1:00 மணி. தொடர்புக்கு: 94480 09087.
அபிஷேகம் - 7:00 மணி; மஹா மங்களரத்தி - 9:00 மணி; காளி பூஜை - மதியம் 12:00 மணி; பிரத்யங்கிரா ஹோமம் - மாலை 6:30 மணி; அபிஷேகம் - இரவு 9:00 மணி; அலங்காரம் - நள்ளிரவு 12:00 மணி. இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், மாகடி சாலை. தொடர்புக்கு: 93437 37609
வேம்பு அம்மன், வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் - காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை; பக்தர்களுக்கு தாயத்து கட்டுதல், திருஷ்டி கழித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வராஹி அம்மன் தேவி கோவில், 6 வது கிராஸ், கே.பி.அக்ரஹாரா, பெங்களூரு. தொடர்புக்கு: 98452 25923
சிறப்பு பூஜை, புஷ்ப அலங்காரம்; தீபாராதனை, அன்ன பிரசாத வினியோகம், பக்திசை கச்சேரி -- காலை 9:00 மணி முதல். இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ஹென்றீஸ் லைன், கோரமண்டல், தங்கவயல்.
சிறப்பு பூஜை, குங்கும, சந்தன அலங்காரம், தீபாராதனை, தீர்த்த பிரசாத வினியோகம் -- காலை 10:00 மணி. இடம்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரண்ட ஹள்ளி, ராபர்ட்சன்பேட்டை.
சிறப்பு பூஜை. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, பிரசாத வினியோகம் - மாலை 6:00 மணி. இடம்: ஆதிசக்தி மாரியம்மன் கோவில், ராபர்ட்சன்பேட்டை, 4 வது பிளாக்.
மண்டல பூஜை
ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
விற்பனை, கண்காட்சி
சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.
மலர் கண்காட்சி
சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில் 12 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி துவக்கம். - காலை 9:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை.
