sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நாளை சந்திர கிரகணம் கோவில்களில் பூஜை மாற்றம்

 நாளை சந்திர கிரகணம் கோவில்களில் பூஜை மாற்றம்

 நாளை சந்திர கிரகணம் கோவில்களில் பூஜை மாற்றம்


ADDED : மார் 02, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:22 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சந்திர கிரகணம் என்பதால், பெங்களூரின் பல்வேறு கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

நாளை மதியம் 3.10 மணி முதல் மாலை 6:47 மணி வரை சந்திர கிரகணம் உள்ளது. எனவே கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. பக்தர்களின் தகவலுக்காக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

பெங்களூரின் காடுமல்லேஸ்வரர் கோவிலில் காலை 11:00 மணிக்கு கதவு மூடப்படும். இரவு 7:50 மணிக்கு கோவில் கதவு திறந்து, பூஜைகள் துவக்கப்படும் என, கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

மார்ச் 4ம் தேதியன்று, காடு மல்லேஸ்வரர் கோவிலில், நவக்கிரஹ சாந்தி ஹோமம் நடக்கவுள்ளது. இதற்கான தானியங்களை தானம் செய்யும்படி கூறப்பட்டுள்ளது.

கவி கங்காதரேஸ்வரர் கோவில், நாளை காலை 9:00 மணிக்கு மூடப்படும். இரவு 7:45 மணிக்கு பின்னரே கதவு திறக்கப்படும். பவுர்ணமி அன்றே, கிரகணம் இருப்பதால், தீ விபத்து போன்ற, அசம்பாவிதங்கள் நடக்க கூடும் என, கவி கங்காதரேஸ்வரர் கோவிலின் தலைமை அர்ச்சகர் சோமசுந்த தீக்ஷித் எச்சரித்துள்ளார். இங்கும் உலக நன்மைக்காக, மார்ச் 4ல் ஹோமங்கள் நடக்கவுள்ளன.

பனசங்கரி கோவிலில், நாளை காலை பூஜைகள் இருக்காது. இரவு 7:45 மணிக்கு பின்னரே, பூஜைகள், கிரக சாந்தி ஹோமங்கள் நடக்கும். தொட்ட கணபதி கோவிலிலும், இரவு 7:45 க்கு பின், கோவில் நடை திறக்கப்படும்.

பன்டே மஹாகாளி கோவில், கிரகண நேரத்தில் மூடப்படாது. கிரகணம் ஆரம்பமாகும் நேரத்தில், சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடக்கும். இக்கோவிலும் பல காலமாக இதே சம்பிரதாயம் உள்ளது. விருப்பம் இருந்தால்,

பக்தர்கள் சந்திர சாந்தி ஹோமங்களில் பங்கேற்கலாம். கிரகண நேரத்தில் அம்பாளுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். மறுநாள் கும்ப ஸ்நானம் செய்யப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us