தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/சுற்றுலா பயணியரை ஈர்க்கும் கப்பல் அருங்காட்சியகம்

சுற்றுலா பயணியரை ஈர்க்கும் கப்பல் அருங்காட்சியகம்

சுற்றுலா பயணியரை ஈர்க்கும் கப்பல் அருங்காட்சியகம்


UPDATED : நவ 19, 2026 12:00 AM

ADDED : நவ 18, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 12:00 AM ADDED : நவ 18, 2026 08:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: கார்வார் கடற்கரையில் அமைந்துள்ள அருங்காட்சியகம், சுற்றுலா பயணியரை கவர்ந்து இழுக்கிறது. இந்திய கப்பற் படையில் செயல்பட்ட, கடலோர பகுதிகளின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்த போர் கப்பலை, அருங்காட்சியகத்தில் காணலாம்.

உத்தர கன்னடா மாவட்டம், கார்வார் நகரில், ரவீந்திரநாத்தாகூர் கடற்கரையில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இதுவரை, 22 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர், இங்கு வந்து பார்வையிட்டுள்ளனர்.

மாணவ, மாணவியரும் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். பல ஆண்டுகள் வரை, இந்திய ராணுவத்தில் செயல்பட்ட போர் கப்பலை ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர்.

மற்ற சுற்றுலா தலங்களை விட, இது முற்றிலும் மாறுபட்டது. இது, உருவாக்கப்பட்ட சுற்றுலா தலமாகும். கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணியர், அருங்காட்சியகத்துக்கும் வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் கூட, 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் போர் கப்பல் அருங்காட்சியகத்தை பாராட்டி பேசினார். இங்கு வரும் சுற்றுலா பயணியர், போர் கப்பலை பற்றி ஆர்வத்துடன் தகவல் கேட்டறிகின்றனர்.

அருங்காட்சியகத்தில் உள்ள, ஐஎன்எஸ் சாப்பல் போர் கப்பல், 29 ஆண்டு காலம் இந்திய ராணுவத்தின் கடற்படையில் பணியாற்றியது. இது, 275 டன் எடை கொண்டதாகும். 38.6 மீட்டம் நீளம், 7.6 மீட்டர் அகலம் கொண்டதாகும்.

ராணுவ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்களை அனுப்பும், அதிநவீன ரேடார் வசதி கொண்டுள்ள இந்த கப்பல், பல சிறப்புகளை கொண்டதாகும்.

கடந்த, 2005ம் ஆண்டு மே 5ம் தேதியன்று, ராணுவ பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது. 2006 நவம்பர் முதல், ரவீந்திரநாத் தாகூர் கடற்கரையில், அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. சுற்றுலா பயணியர் கப்பலுக்குள் சென்று கேப்டன் அறை, இயந்திர அறை, கட்டுப்பாட்டு அறை, மாலுமிகள் தங்கும் பகுதிகள், ஆயுத கிடங்குகளை நேரில் பார்க்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

கப்பலில் பணியாற்றிய மாலுமிகள், மருத்துவர்கள், அதிகாரிகளின் மெழுகு சிலைகள், சீருடைகள் வைக்கப்பட்டுள்ளன.

கப்பலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள், துப்பாக்கிகளின் மாதிரிகள், போர் கருவிகளை அருங்காட்சியகத்தில் காணலாம். இந்திய கடற்படையின் வரலாறு மற்றும் கார்வார் கடற்படை பற்றிய ஆவணப்படும் இங்கு திரையிடப்படுகிறது.

உத்தர கன்னடாவுக்கு சுற்றுலா வருவோர், கடற்கரைகள் மட்டுமின்றி, இந்த கப்பல் அருங்காட்சியகத்தை காண மறக்காதீர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us