/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடுரோட்டில் அதிர்ச்சி: எரிந்த சுற்றுலா பஸ்
/
நடுரோட்டில் அதிர்ச்சி: எரிந்த சுற்றுலா பஸ்
ADDED : டிச 16, 2025 05:13 AM
மடிகேரி: சுற்றுலா பயணியரை அழைத்து சென்ற பஸ், சாலை நடுவில் தீப்பிடித்து எரிந்ததால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
கேரள பதிவு எண் கொண்ட, தனியார் பஸ் சுற்றுலா பயணியரை மைசூருக்கு அழைத்து வந்தது. இங்கு சுற்றுலா பயணியரை இறக்கி விட்டு விட்டு, மீண்டும் கேரளாவுக்கு புறப்பட்டது. பயணியர் அனைவருமே மைசூரில் இறங்கி விட்டதால், பஸ்ஸில் ஓட்டுநரும், நடத்துநரும் மட்டுமே இருந்தனர்.
குடகு மாவட்டம், விராஜ்பேட் தாலுகாவின், மாகுட்டா அருகில் நேற்று காலை செல்லும் போது, பஸ்சில் தீப்பிடித்தது. இதை கவனித்த ஓட்டுநர், உடனடியாக நிறுத்திவிட்டு நடத்துநருடன் கீழே இறங்கி விட்டார். பார்த்து கொண்டிருக்கும் போதே, பஸ் முழுதும் தீ பரவியது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர், அங்கு வந்து தீயை கட்டுப்படுத்துவதற்குள், பஸ் முழுதும் எரிந்து கருகிவிட்டது.
சுற்றுலா பயணியர் இல்லாத காரணத்தால், எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஒருவேளை மைசூருக்கு செல்லும் போது, தீப்பிடித்திருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

