sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பதிவு செய்யாத வெளிமாநில வாகனங்களுக்கு 'கிடுக்கி'

பதிவு செய்யாத வெளிமாநில வாகனங்களுக்கு 'கிடுக்கி'

பதிவு செய்யாத வெளிமாநில வாகனங்களுக்கு 'கிடுக்கி'


UPDATED : மார் 20, 2025 04:19 PM

ADDED : மார் 20, 2025 07:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 20, 2025 04:19 PM ADDED : மார் 20, 2025 07:22 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கர்நாடகாவில் பதிவு செய்யப்படாத வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

மேல்சபையில் ம.ஜ.த., உறுப்பினர் கோவிந்த ராஜு கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது:

மாநிலத்தில் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்படாத வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதை கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மோட்டார் வாகன விதிகள் 5, 1989ன் விதி 46 (2)ன்படி, மறு பதிவுக்காக, வாகனத்தை சம்பந்தப்பட்ட பதிவு அதிகாரியிடம் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்.

ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், மற்றொரு மாநிலத்தில் 12 மாதங்களுக்கு மேல் இயக்கும் வாகன உரிமையாளர்கள், மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ன் விதி 54ன்படி, அசல் பதிவு அதிகாரியிடம் இருந்து என்.ஓ.சி., எனும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

இந்த சான்றிதழ் பெற்று, 30 நாட்களுக்குள், மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ன் விதி 81ன்படி, பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தையும், கர்நாடக மோட்டார் வாகன வரிச்சட்டம், 1957 ன் வரி அட்டவணையின்படி, 'கே.எம்.வி., - 27 மற்றும் சி.எம்.வி., - 27ல்' படிவத்தில், மறுபதிவு எண்ணுக்கு, அதிகாரியிடம் விண்ணப்பித்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us