தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'டாக்சிக்' படம் வெளியாவதில் தாமதம் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

 'டாக்சிக்' படம் வெளியாவதில் தாமதம் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

 'டாக்சிக்' படம் வெளியாவதில் தாமதம் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு


ADDED : மார் 05, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கன்னட நடிகர் யஷ்ஷின் நடித்த, டாக்சிக் படம் வரும், 19ம் தேதி வெளியாக இருந்தது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவுவதால், ஜூன், 4ம் தேதி படம் வெளியாகும் என, தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

கே.ஜி.எப்., - 1, 2 படங்கள் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் கன்னட நடிகர் யஷ். இவரது நடிப்பில் வரும், 19ம் தேதி கன்னட படமான, டாக்சிக் வெளியாக இருந்தது. இந்த படத்தின், 'டீசர்' வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றது.

இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதே சமயம், படத்தின் டீசரில் ஆபாசம், கிறிஸ்துவ மதத்தினரை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, மாநில தலைமை செயலர் ஷாலினியிடம் தேசிய கிறிஸ்துவ கூட்டமைப்பு புகார் செய்தது.

இதனால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிந்தது. அதே சமயம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலான, 'துரந்தர்' படத்தின் இரண்டாவது பாகமும் வரும் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால், 19ம் தேதி இரண்டு பான் இந்தியா படங்கள் ரிலீஸ் ஆவதால், போட்டி கடுமையாக இருக்கும் என்றும் பேசப்பட்டது. இது, டாக்சிக் படத்திற்கு வசூல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தலாம் என சினிமா வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், டாக்சிக் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்., புரோடக் ஷன்ஸ் எதிர்பாராத விதமாக நேற்று அறிக்கை வெளியிட்டது.

அதில், ' டாக்சிக் படம் உலகம் முழுதும் உள்ள பார்வையாளர்களுக்காக தயாரிக்கப்பட்டது. அப்படி இருக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால், தற் போது படம் வெளியாவது சரி யாக இருக்காது. எனவே, டாக்சிக் படம் ஜூன் 4ம் தேதி வெளியாகும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us