தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாம்பழ மேளாவில் விற்பனையில்லை வியாபாரிகள் கவலை

 மாம்பழ மேளாவில் விற்பனையில்லை வியாபாரிகள் கவலை

 மாம்பழ மேளாவில் விற்பனையில்லை வியாபாரிகள் கவலை


ADDED : ஜூன் 14, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: லால்பாக் மாம்பழ மேளாவில் வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததால், வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.

பெங்களூரு லால்பாக் தாவரவியல் பூங்காவில் கடந்த 1ம் தேதி 'மாம்பழ மேளா' துவங்கியது. வரும், 30ம் தேதி வரை நடக்கிறது. இந்த மேளாவை தோட்டக்கலைத்துறை ஆண்டுதோறும் நடத்துகிறது. 150க்கும் மேம்பட்ட கடைகள் உள்ளன. மல்கோவா, செந்துாரம் உள்ளிட்ட பல வகை மாம்பழங்கள் உள்ளன.

இந்த முறை மாம்பழ மேளாவிற்கு வாடிக்கையாளர்கள் வரத்து குறைவாகவே உள்ளனர். இதனால், வியாபாரிகள் வருத்தமுற்று உள்ளனர்.

இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது:

லால்பாக் பூங்காவில் நடக்கும் மாம்பழ மேளா பிரசித்தி பெற்றது. இம்முறை வாடிக்கையாளர்கள் வரத்து மந்தமாகவே உள்ளது. இதனால், வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மாம்பழங்கள் அழுகும் வாய்ப்பு உள்ளது.

மேளா நடக்கும் இடத்திலிருந்து வாகனங்களை பார்க்கிங் செய்யும் இடம் மிகவும் துாரமாக உள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் நீண்ட துாரம் நடக்க வேண்டிய சூழல் உள்ளது. கடைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us