ADDED : ஜூலை 15, 2026 11:45 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: போக்குவரத்து அபராதங்களை செலுத்த, 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டதன் மூலம் 55 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 50 சதவீத தள்ளுபடியுடன் செலுத்த, கடந்த ஜூன் 21 முதல் கடந்த 10ம் தேதி வரை மாநிலம் அரசு அவகாசம் வழங்கியது.
கடந்த, 1991 முதல் 2026 மே மாதம் வரையிலான காலகட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்பட்டது.
இந்த சலுகையை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி கொண்டனர். இதன் மூலம் நிலுவையிலிருந்த 19,13,659 வழக்குகள் தீர்க்கப்பட்டன.
இதன் வாயிலாக, 55 கோடி ரூபாய் அபராதம் வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
