சாலை விதிகளை மீறிய எம்.எல்.ஏ.,வுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்
சாலை விதிகளை மீறிய எம்.எல்.ஏ.,வுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்
ADDED : ஆக 26, 2026 11:03 PM

ஹாவேரி: ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணித்து, சாலை விதிகளை மீறிய ராணிபென்னுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரகாஷ் கோலி வாடுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
ஹாவேரி மாவட்டம், ராணிபென்னுார் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரகாஷ் கோலிவாட். இவர் நேற்று முன் தினம் மாலை, பைக்கில் சாலையில் பயணித்தார். இவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்து, சாலை போக்குவரத்து விதிகளை மீறினார்.
இதை கவனித்த ராணிபென்னுார் போக்குவரத்து போலீசார், எம்.எல்.ஏ., பிரகாஷ் கோலிவாடின் வீட்டுக்கு, நேற்று காலை நோட்டீஸ் அனுப்பி, 500 ரூபாய் அபராதம் செலுத்தும்படி கூறினர்.
சட்டத்துக்கு அடிபணிந்த அவர், 500 ரூபாய் அபராதம் செலுத்தினார். எம்.எல்.ஏ., என்பதால் விதி விலக்கு அளிக்காமல், நோட்டீஸ் அனுப்பி அபராதம் வசூலித்த போக்குவரத்து போலீசாரை, பொது மக்கள் பாராட்டினர்.
எம்.எல்.ஏ., பிரகாஷ் கோலிவாட் கூறுகையில், ''சாலை விதிகளை மீறியதால், போக்குவரத்து போலீசார் எனக்கு நோட்டீஸ் அனுப்பி, அபராதம் விதித்தனர். போலீசார் அவர்களின் கடமையை நேர்மையுடன் செய்துள்ளனர். அதை நான் கவுரவிக்கிறேன்,'' என்றார்.
