/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போக்குவரத்து விதிமீறல் ரூ.200 கோடி அபராதம் வசூல்
/
போக்குவரத்து விதிமீறல் ரூ.200 கோடி அபராதம் வசூல்
போக்குவரத்து விதிமீறல் ரூ.200 கோடி அபராதம் வசூல்
போக்குவரத்து விதிமீறல் ரூ.200 கோடி அபராதம் வசூல்
ADDED : நவ 15, 2025 08:07 AM
பெங்களூரு: பெங்களூரில் பத்து மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடமிருந்து 200 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். போலீசாரிடமிருந்து தப்பிக்கும் வாகன ஓட்டிகளை, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்படுகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து இணை கமிஷனர் கார்த்திக் ரெட்டி கூறியதாவது:
பெங்களூரில், நடப்பாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 10 மாதங்களில், 51.8 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் இருந்து 207.35 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இது புதிய சாதனையாகும்.
கடந்த ஆண்டு 84.91 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டு முடிவதற்குள்ளேயே, 200 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலாகி உள்ளது.
நடப்பாண்டு ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 14 வரை போக்குவரத்து விதிமீறல்கள் வழக்குகளில் அபராதம் கட்டுவதில் 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இதை பலரும் பயன்படுத்திக் கொண்டனர். இந்த காலகட்டத்தில் மட்டும் 106 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதுவே, வசூல் அதிகரித்ததற்கு காரணம்.
இதில் ஹெல்மெட் அணியாத வழக்குகளே அதிகம். இந்த வருவாய் அனைத்தும் அரசின் கருவூலத்திற்கு நேரடியாக செல்லும். இதனால், அரசு தரப்பில் அதீத வரவேற்பு கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

