sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்... நாளை நடக்குமா? : தொழிற்சங்கங்களுடன் முதல்வர் இன்று பேச்சு

/

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்... நாளை நடக்குமா? : தொழிற்சங்கங்களுடன் முதல்வர் இன்று பேச்சு

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்... நாளை நடக்குமா? : தொழிற்சங்கங்களுடன் முதல்வர் இன்று பேச்சு

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்... நாளை நடக்குமா? : தொழிற்சங்கங்களுடன் முதல்வர் இன்று பேச்சு


ADDED : ஆக 04, 2025 05:15 AM

Google News

ADDED : ஆக 04, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவில் பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மெட்ரோபாலிடன் போக்குரவத்து கழகம், கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் மாநில சாலை போக்குவரத்து கழகம், என்.டபிள்யூ.கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் வட கர்நாடகா சாலை போக்குவரத்து கழகம், கே.கே.ஆர்.டி.சி., எனும் கல்யாண கர்நாடகா போக்குவரத்து கழகம் ஆகியவை இயங்கி வருகிறது. இதில், 1.15 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

முக்கிய கோரிக்கை கடந்த 2020 முதல் 2023 வரை, 38 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்குதல்; போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரித்து, சம ஊதியம் வழங்குதல்; போக்குவரத்து கழகங்களில் தனியார்மயமாக்கல், தொழிலாளர்கள் துன்புறுத்தலை முடிவுக்கு கொண்டு வருதல்.

அனைத்து ஊழியர்களுக்கும் பணமில்லா மருத்துவ சிகிச்சை வசதி; ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குதல்; புதிய ஊதிய விதிதத்தை 2024 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்துதல்; தொழிலாளர்களுக்கான உணவக வசதி மேம்படுத்துதல்; 2020 மற்றும் 2021 வேலை நிறுத்தத்தின் போது, தொழிலாளர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளையும் திரும்ப பெறுதல்; மின்சார பஸ்களுக்கு கழகங்களின் ஓட்டுநர்களை நியமித்தல்; மின்சார பஸ் பராமரிப்பை, தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கும் நடைமுறையை ரத்து செய்வது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இது தொடர்பாக, ஜூலை 7ல் முதல்வர் சித்தராமையா, தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'ஒரு வாரத்திற்குள் மீண்டும் கூட்டம் நடத்தப்படும்' என்று கூறியிருந்தார். ஆனால் அழைக்கவில்லை.

பொறுமை இழந்த அவர்கள், ஆக., 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்தனர்.

அவர்களை சமாதானம் செய்ய அரசு அதிகாரிகள் முயற்சித்தும் முடியாததால், மாநில அரசு, 'எஸ்மா' சட்டத்தை அமல்படுத்தியது. இதன் மூலம், நடப்பாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை, போக்குவரத்து ஊழியர்கள் யாரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது.

பேச்சு தோல்வி இந்நிலையில், கடைசி கட்ட முயற்சியாக, நேற்று முன்தினம் தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து துறையினர் பேச்சு நடத்தினர். இந்த பேச்சும் தோல்வியில் முடிந்தது.

இது குறித்து தொழிற்சங்கங்களின் தலைவர் அனந்து சுப்பாராவ் கூறியதாவது:

தொழிற்சங்க சட்டம் மற்றும் தொழில்துறை தகராறு சட்டம் ஆகியவை வாரியங்களுக்கும் பொருந்தும். 1996ல் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு செய்ய வேண்டும்.

கடைசியாக, 2020 முதல் 2023 வரை நிலுவையில் உள்ள 38 மாதங்களுக்கான ஊதியம் வழங்கவில்லை. இது குறித்து பலமுறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும், எந்த பலனும் இல்லை. எனவே, டிசம்பரில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தோம். ஆனால் முதல்வர் பேச்சு நடத்தியதன் மூலம் வாபஸ் பெறப்பட்டது.

பா.ஜ., ஆட்சியில் ஒப்பந்தம் செய்வதில் தவறு ஏற்பட்டிருந்தால், தற்போதைய அரசு அதை சரி செய்ய வேண்டும். அதை விடுத்து, நிலுவை தொகை வழங்க முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 8,000 கோடி ரூபாய் வழங்கும் அரசு, ஊழியர்களின் நிலுவை தொகையான, 1,800 கோடி ரூபாய் வழங்க 'நல்ல நாள்' பார்க்கின்றனர். இனி அரசிடம் இருந்து எந்த வாக்குறுதியையும் ஏற்கமாட்டோம். எங்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் அல்லது வேலை நிறுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும். இதுவே எங்கள் இறுதி முடிவு.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக யாரும் வாய் திறப்பதில்லை. அதுபோன்று 'கர்நாடகாவின் மோடி' சித்தராமையா. அவருக்கு எதிராக யாரும் பேசாமல், வாய் மூடி மவுனமாக உள்ளனர். நல்ல மனிதரான போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் பேச்சு கூட எடுபடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

11,000 தனியார் பஸ்கள் இதற்கிடையில், போக்குவரத்து துறை கூடுதல் கமிஷனர்கள் மல்லிகார்ஜுன், உமாசங்கர், ஷோபா ஆகியோர் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் பேச்சு நடத்தினர்.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினால், பெங்களூரில் 4,000 பஸ்களும், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் 7,000 பஸ்களையும் இயக்க, தனியார் பஸ் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், 'வேலை நிறுத்தத்தின் போது இயக்கப்படும் பஸ்களுக்கு, 15 நாள் சாலை வரி விலக்கு; டிஜிட்டல் கண்காணிப்பு தணிக்கை அமைப்பின் கீழ் விதிக்கப்படும் அபராதங்களில் 50 சதவீதம் விலக்கு; அறிவிக்கப்பட்ட நேரங்கள், வழித்தடங்களை மீறும் அரசு பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து உள்ளனர்.

பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, தனியார் பஸ் உரிமையாளர்களுடன், போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முதல்வர் சித்தராமையா பேச்சு நடத்துவதாக அறிவித்து உள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவை பொறுத்தே, நாளை போராட்டம் நடக்குமா, இல்லையா என்பது தெரியவரும்.






      Dinamalar
      Follow us