தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ டிக்கெட் இல்லாமல் பயணம் ரூ.8.94 லட்சம் அபராதம் வசூல்

 டிக்கெட் இல்லாமல் பயணம் ரூ.8.94 லட்சம் அபராதம் வசூல்

 டிக்கெட் இல்லாமல் பயணம் ரூ.8.94 லட்சம் அபராதம் வசூல்


ADDED : ஜூன் 28, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 10:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: அரசு பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடமிருந்து, 8.94 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கர்நாடகா சாலை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவ்வகையில், மாநிலத்தின் பல பகுதிகளில் 42,000க்கும் மேற்பட்ட அரசு பஸ்களில், கடந்த மாதம் சோதனை நடந்தது.

இதில், டிக்கெட் எடுக்காமல் பயணித்த 4,476 பேர் கண்டறியப்பட்டனர்.

அவர்களிடமிருந்து, 8.94 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அரசு பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதை தடுக்கும் நடவடிக்கைகள் வரும் காலத்திலும் தொடரும். பயணியர், பஸ்சில் ஏறியதும் டிக்கெட் வாங்க வேண்டும். வாங்கிய டிக்கெட்டை பயணம் முடியும் வரை பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us