ADDED : ஆக 19, 2026 11:16 PM

யஷ்வந்த்பூர்: குடிக்க தண்ணீர் த ராததால், லாரி கிளீனரை கத்தியால் குத்தி கொன்ற, லாரியின் கிளீனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திராவை சேர்ந்தவர் பர்கத், 43. லாரி கிளீனர். பெங்களூரு யஷ்வந்த்பூர் ஆர்.எம்.சி., யார்டுக்கு காய்கறிகள் ஏற்றி வந்த லாரியில் கிளீனராக வந்தார். நேற்று முன்தினம் இரவு பர்கத்தும், இன்னொரு லாரியின் கிளீனரான, துமகூரு மதுகிரியின் சீனப்பா, 45, ஆகியோரும் உணவு சாப்பிட்டனர்.
குடிக்க தண்ணீர் எடுத்து வரும்படி பர்கத்திடம், சீனப்பா கூறியுள்ளார். 'நான் என்ன உனது வேலைக்காரனா; உனக்கு வேண்டும் என்றால் நீயே சென்று குடித்து கொள்' என்று பர்கத் கூறியுள்ளார்.
கோபம் அடைந்த சீனப்பா, தன் லாரிக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, பர்கத்தை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார்.
ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து பர்கத் இறந்தார். யார்டு பகுதியில் பதுங்கி இருந்த சீனப்பாவை, ஆர்.எம்.சி., யார்டு போலீசார் கைது செய்தனர். தண்ணீர் தராததால் தான் கொலை நடந்ததா அல்லது இரு வருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததா என்றும் விசாரணை நடக்கிறது.
