/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
கழுதை வளர்ப்பில் தொழில் முனைவோரான துமகூரு பட்டதாரி பெண்
/
கழுதை வளர்ப்பில் தொழில் முனைவோரான துமகூரு பட்டதாரி பெண்
கழுதை வளர்ப்பில் தொழில் முனைவோரான துமகூரு பட்டதாரி பெண்
கழுதை வளர்ப்பில் தொழில் முனைவோரான துமகூரு பட்டதாரி பெண்
ADDED : நவ 16, 2025 11:21 PM

இன்றைய காலத்தில் நன்றாக படித்து பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் உயர் பதவியில் இருப்பவர்கள் கூட, தங்கள் வேலையை துறந்து விவசாயம் செய்கின்றனர்; தொழில்முனைவோராக மாறி வருகின்றனர். இதுபோன்று பட்டதாரியான ஒரு பெண், கழுதை வளர்ப்பு மூலம் தொழில்முனைவோராக மாறி உள்ளார்.
துமகூரின் மதுகிரியை சேர்ந்தவர் மேகா. பி.எஸ்சி., பட்டதாரி. தனது ஊரில், 'கேஷீர்சாகர்' என்ற பெயரில் கழுதை பண்ணை வைத்து உள்ளார். இங்கு, 40 கழுதைகளை பராமரிக்கிறார். கழுதை பாலை பயன்படுத்தி சோப்பு, முகத்தில் தடவும் கிரீம் தயாரித்து விற்பனை செய்து, தொழில் முனைவோராக மாறி உள்ளார்.
இதுகுறித்து மேகா கூறியதாவது:
கழுதை என்றால் பொதி சுமக்க மட்டுமே பயன்படும் என்று பலர் நினைப்பது உண்டு. அது தவறான எண்ணம். கல்லுாரியில் படிக்கும் போது, கழுதை தொடர்பாக நான் ஆராய்ச்சி மேற்கொண்ட போது, கழுதையால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டேன்.
இதனால், கழுதை பண்ணை அமைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. திருமணத்திற்கு பின், கணவர் உதவியுடன் துமகூரில் கழுதை பண்ணை அமைத்தேன். தற்போது எனது பண்ணையில் 40 கழுதைகள் உள்ளன. கழுதை பாலின் மூலம் சோப்பு, சரும பராமரிப்பு பொருட்கள் தயாரிக்கிறோம். இதற்கு இயந்திரம் எதுவும் பயன்படுத்தவில்லை. கையால் தயாரிக்கிறோம்.
கழுதை பாலில் தயாரிக்கும் சோப்பு, சருமத்தை மென்மையாக வைத்திருக்கிறது. சருமத்தில் ஏற்படும் அரிப்பை குறைக்கிறது. ஒரு லிட்டர் கழுதை பால் 2,500 ரூபாய்க்கும், ஒரு சோப்பு 250 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம்.
இதுவரை கடைகளில் நேரடியாக விற்பனை செய்யவில்லை. கண்காட்சிகளில் அரங்கு அமைத்து விற்பனை செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கழுதை பால், சோப்பு வாங்க வேண்டும் என்று நினைப்போர் md.ksdfarm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் ஆர்டர் செய்யலாம். மொபைல்: 91646 47133.
- நமது நிருபர் -

