/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இரண்டரை ஆண்டு பதவி பங்கீடு: அமைச்சர் முனியப்பா சூசகம்
/
இரண்டரை ஆண்டு பதவி பங்கீடு: அமைச்சர் முனியப்பா சூசகம்
இரண்டரை ஆண்டு பதவி பங்கீடு: அமைச்சர் முனியப்பா சூசகம்
இரண்டரை ஆண்டு பதவி பங்கீடு: அமைச்சர் முனியப்பா சூசகம்
ADDED : மே 14, 2025 12:24 AM

கோலார் : கர்நாடகாவில் முதல்வர் பதவி இரண்டரை ஆண்டுகள் என்பதை, உணவு பொது வினியோக துறை அமைச்சர் முனியப்பாவின் பேச்சில் இருந்து ஊர்ஜிதமாகி விட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தவுடன், கட்சி மேலிடம் சிவகுமாரை சமாதானப்படுத்தியது. இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவகுமாரும் முதல்வராக இருப்பர் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால், இதை கட்சி மேலிடமும், தலைவர்களும் மறுத்து வந்தனர். இதற்கிடையில், கர்நாடகாவில் ஐந்து ஆண்டுகள் தானே முதல்வராக தொடர, சித்தராமையா தன் ஆதரவாளர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் சிவகுமார், அவரது சகோதரர் முன்னாள் எம்.பி., சுரேஷ், ஆதரவாளர்களும் பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் கடுமையான எச்சரிக்கைக்கு பின், சிவகுமார் அடக்கி வாசிக்க துவங்கினார்.
இந்நிலையில், கோலாரில் உணவு பொது வினியோக துறை அமைச்சர் முனியப்பா கூறியதாவது:
அடுத்த சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு, கட்சியை வளர்க்க வேண்டும். கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவும், கட்சியின் நலனுக்காகவும் மூத்தவர்கள் அனுமதிக்க வேண்டும்.
மாநில காங்கிரஸ் அரசு இரண்டரை ஆண்டுகள் நிறைவு செய்த பின், இரண்டாம் நிலை தலைவர்களுக்கு, மூத்த அமைச்சர்கள் வழிவிட்டு தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். கட்சியை கட்டமைக்க, ஒருவர் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். ஆனாலும் இறுதி முடிவு கட்சி மேலிடம் எடுக்கும். முதல்வர், மாநில தலைவர் மாற்றம் குறித்து கட்சியில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இருவரும் அந்தந்த பதவியில் தொடருவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம், இந்தாண்டு இறுதிக்குள் ஆட்சி தலைமை மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.