ADDED : ஜூன் 20, 2026 10:58 PM
அ நிறம் | அளவு
தொட்டபல்லாபூர்: சந்தன மரம் கடத்திய இருவரை கைது செய்துள்ள போலீசார், 200 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் நகரின், கச்சேரிபாளையாவில் உள்ள அரசு தொடக்க பள்ளி வளாகத்திலும், தர்காமொஹல்லா அருகில் உள்ள மசூதி மற்றும் மயானம் உட்புறத்திலும் வளர்ந்திருந்த சந்தன மரங்களை, ஜூன் 13ம் தேதி நள்ளிரவு, மர்ம கும்பல் வெட்டி திருடி சென்றது.
இது குறித்து, விசாரணை நடத்திய தொட்டபல்லாபூர் நகர் போலீசார், வெங்கடேஷ், 26, அருண், 34, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 200 கிலோ சந்தன மரக்கட்டைகள் மீட்கப்பட்டன.
