sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துங்கபத்ரா நதியில் பரிசல் கவிழ்ந்து இருவர் பலி?

துங்கபத்ரா நதியில் பரிசல் கவிழ்ந்து இருவர் பலி?

துங்கபத்ரா நதியில் பரிசல் கவிழ்ந்து இருவர் பலி?


ADDED : அக் 07, 2025 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2025 04:56 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே: பரிசல் கவிழ்ந்து துங்கபத்ரா நதியில் மூழ்கிய இருவரை தேடி வருகின்றனர்.

தாவணகெரே மாவட்டம், ஹொன்னாலியை சேர்ந்தவர்கள் திப்பேஷ், 19, முக்தியார், 25, உட்பட நான்கு பேர் நேற்று காலை துங்கபத்ரா நதியில் பரிசலில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை கரையில் இருந்து பார்த்தவர்கள், உடனடியாக நதியில் குதித்து இருவரை மீட்டனர். இருவர் நீரில் மூழ்கினர்.

இதுகுறித்து ஹொன்னாலி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீரில் மூழ்கிய இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

இளைஞர்கள் மீன் பிடிக்க சென்றபோது பரிசல் கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், அப்பகுதி மக்களோ, 'ஆற்றில் இருந்து மணல் அள்ளும்போது பரிசல் கவிழ்ந்து உயிரிழந்தனர்' என குற்றஞ்சாட்டி உள்ளனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us