/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நகைக்கடை கொள்ளை வழக்கு மும்பையில் மேலும் இருவர் கைது
/
நகைக்கடை கொள்ளை வழக்கு மும்பையில் மேலும் இருவர் கைது
நகைக்கடை கொள்ளை வழக்கு மும்பையில் மேலும் இருவர் கைது
நகைக்கடை கொள்ளை வழக்கு மும்பையில் மேலும் இருவர் கைது
ADDED : ஜூலை 31, 2025 05:55 AM
கலபுரகி : பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளையடித்த சம்பவத்தில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இத்துடன் கைதானவர்களின் எண்ணிக்கை, ஐந்தாக அதிகரித்துள்ளது.
கலபுரகி போலீஸ் துறை வெளியிட்ட அறிக்கை:
கலபுரகி நகரின், சராப் பஜார் வர்த்தக பகுதியில், 'மல்லிக் ஜுவல்லரி' என்ற நகைக்கடை உள்ளது. ஜூலை 11ம் தேதி காலை, நகைக்கடைக்குள் புகுந்த மர்ம கும்பல், உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி, 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். பட்டப்பகலில் நடந்த கொள்ளையால், அப்பகுதி வர்த்தகர்கள் பீதியில் உள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய பிரம்மபுரா போலீசார், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குற்றவாளிகளை தேடினர்.
மும்பையை சேர்ந்த சீதாராம் சவ்ஹான், 48, தங்க வியாபாரி பாருக் அகமது முல்லிக், 40, சோஹல் ஷேக், 30, ஆகியோரை கைது செய்தனர். 2.10 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 4.80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.
கொள்ளையில் தொடர்புடைய மற்றவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர். நேற்று முன்தினம் மும்பையை சேர்ந்த அர்பாஜ் ஷேக், 22, முகமது சாஜித், 25, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தனிப்படையினர் இதுவரை ஐந்து கொள்ளையர்களை கைது செய்தனர். இவர்கள் கொள்ளையடித்த பின், மும்பைக்கு ரயிலில் சென்றுள்ளனர். போலீசார் தீவிரமாக தேடியதால், நகைகளை விற்காமல் வைத்திருந்தது, விசாரணையில் தெரிந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.