/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.2 கோடி போதை பறிமுதல் நைஜீரியார் இருவர் கைது
/
ரூ.2 கோடி போதை பறிமுதல் நைஜீரியார் இருவர் கைது
ADDED : அக் 15, 2025 12:59 AM

எலக்ட்ரானிக் சிட்டி : பெங்களூரில் விற்பனை செய்ய முயன்ற 2.15 கோடி ரூபாய், போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. நைஜீரியாவின் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டி பேஸ் 1 மஹாலட்சுமி லே - அவுட் பகுதியில் நேற்று காலை, ஸ்கூட்டரில் இருந்தபடி, வெளிநாட்டுக்காரர் ஒருவர் போதைப் பொருள் விற்றுக் கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று, போதை விற்ற நைஜீரியாவின் ஒக்கி சென்யாடு சாமுவேல், 33, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையின்போது, நைஜீரிய தோழியும், எலக்ட்ரானிக் சிட்டி டெக்சிட்டி லே - அவுட்டில் வசிப்பவருமான குயிகிரிசா டோபிஸ்ட், 30, என்பவருக்கும், போதை விற்பனையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலை அடுத்து, குயிகிரிசாவும் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடம் இருந்து 490 கிராம் எம்.டி.எம்.ஏ., படிகங்கள், 43 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்மதிப்பு இரண்டு கோடி ரூபாய். தலைமறைவாக உள்ள இன்னொருவரை போலீசார் தேடுகின்றனர்.
கைதான இருவரும் மருத்துவ விசாவில் இந்தியா வந்தவர்கள். ஐ.டி., நிறுவனங்களில் வேலை செய்வோரை குறி வைத்து போதை விற்றதும் தெரிய வந்துள்ளது.