/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அண்ணன் மகன்களை கம்பியால் அடித்து கொன்ற சித்தப்பா கைது
/
அண்ணன் மகன்களை கம்பியால் அடித்து கொன்ற சித்தப்பா கைது
அண்ணன் மகன்களை கம்பியால் அடித்து கொன்ற சித்தப்பா கைது
அண்ணன் மகன்களை கம்பியால் அடித்து கொன்ற சித்தப்பா கைது
ADDED : ஜூலை 27, 2025 05:08 AM

ஹெப்பகோடி: அண்ணன் மகன்களை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற, சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
யாத்கிர் மாவட்டம், குருகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் சந்த் பாஷா, 40. இவரது மனைவி ரிஹானா, 37 இந்த தம்பதியின் மகன்கள் முகமது இஷாக், 9, முகமது ஜுனைத், 7, முகமது ரோஷன், 5.
சந்த் பாஷா தன் மனைவி, மகன்கள், தாய், சகோதரர் காசிம், 35 ஆகியோருடன், பெங்களூரு ஹெப்பகோடி கம்மசந்திராவில் வசித்தார். சந்த் பாஷா கட்டுமான தொழிலாளியாகவும், ரிஹானா ஆயத்த ஆடை தொழிற்சாலையிலும் வேலை செய்கின்றனர். நேற்று காலை இருவரும் பணிக்கு சென்றுவிட்டனர்.
பள்ளி விடுமுறை என்பதால், சந்த் பாஷாவின் மகன்கள் மூன்று பேரும் வீட்டில் இருந்தனர். நேற்று மதியம் 2:00 மணியளவில் வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து, அண்ணன் மகன்கள் 3 பேரையும், காசிம் சரமாரியாக தாக்கினார். இதில் முகமது இஷாக், முகமது ஜுனைத் பரிதாபமாக இறந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் முகமது ரோஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஹெப்பகோடி போலீசார், காசிமை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், கடந்த மாதம் காசிம் திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் தேடி வீட்டிற்கு அழைத்து வந்தது தெரியவந்தது. அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிய, தற்போது ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.