/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தொழிற்சாலை அமைக்க ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் குமாரசாமி எதிர்பார்ப்பு
/
தொழிற்சாலை அமைக்க ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் குமாரசாமி எதிர்பார்ப்பு
தொழிற்சாலை அமைக்க ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் குமாரசாமி எதிர்பார்ப்பு
தொழிற்சாலை அமைக்க ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் குமாரசாமி எதிர்பார்ப்பு
ADDED : அக் 17, 2025 03:56 AM

மாண்டியா: “நான் மத்திய கனரக தொழிற்துறை அமைச்சராக இருந்தாலும், மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்கும் அதிகாரம், மாநில அரசுக்கே உள்ளது. தொழிற்சாலை அமைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,” என, மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
மாண்டியாவில் அவர் அளித்த பேட்டி:
தவிர்க்க முடியாத காரணங்களால், சில மாதங்களாக மாண்டியாவுக்கு வர முடியவில்லை. ஆனால் மாவட்டத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயம் பற்றியும், தகவல் பெற்றுக் கொண்டேன். பணி நெருக்கடிக்கு இடையிலும், நேரம் ஒதுக்கிக் கொண்டு, மாவட்டத்துக்கு வந்தேன்.
மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். பல திட்டங்களை செயல்படுத்துவேன். இம்முறை சமூக பொறுப்பு நிதியுதவியில், பள்ளி கட்டடங்கள், பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளன. மை ஷுகர் பள்ளி நிகழ்ச்சிக்கு வந்தேன். வரலாற்று பிரசித்தி பெற்ற இப்பள்ளிக்கு, கூடுதல் நிதியுதவி வழங்கும் பொறுப்பு என்னுடையது. இதை தனியார் வசமாக்க வேண்டாம், எனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, சில துறைகளில் இருந்து, நிதியுதவி பெறலாம்.
தொழில் விஷயத்தில், நம் மாநிலத்துக்கும், ஆந்திராவுக்கும் இடையே போட்டி உள்ளது. பத்ராவதி தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படும். ஹெச்.எம்.டி., தொழிற்சாலையையும் சீரமைக்க திட்ட அறிக்கை தயாராகிறது.
நான் மத்திய கனரக தொழிற் துறை அமைச்சராக இருந்தாலும், மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்கும் அதிகாரம், மாநில அரசுக்கே உள்ளது. தொழிற்சாலை அமைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தீபாவளி பரிசு கொடுக்கிறோம் என கூறி, மாநில அரசு பெங்களூரு மக்களின் பாக்கெட்டை காலியாக்குகிறது. 'பி' பட்டாவை 'ஏ' பட்டாவாக மாற்றும் பெயரில், 15,000 கோடி ரூபாய் கொள்ளையடிக்க முற்பட்டுள்ளனர். பட்டா மாற்றம் செய்து கொள்ள, 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.