/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நிலுவை ரயில்வே திட்டங்கள் அமல் மத்திய அமைச்சர் சோமண்ணா உறுதி
/
நிலுவை ரயில்வே திட்டங்கள் அமல் மத்திய அமைச்சர் சோமண்ணா உறுதி
நிலுவை ரயில்வே திட்டங்கள் அமல் மத்திய அமைச்சர் சோமண்ணா உறுதி
நிலுவை ரயில்வே திட்டங்கள் அமல் மத்திய அமைச்சர் சோமண்ணா உறுதி
ADDED : மே 07, 2025 11:13 PM

தாவணகெரே: கர்நாடகாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள், தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார்.
தாவணகெரேவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கதக் - குஷ்டகி இடையே ரயில்வே பணிகள் வரும் 15ம் தேதி துவங்க உள்ளன. சிந்தனூர் - ராய்ச்சூர், லோகாபுரா - காச்சிகுடா ரயில் பாதை பணிகள் வரும் ஜூலைக்குள் முடிவடையும்.
தாவணகெரே - சித்ரதுர்கா - துமகூரு நேரடி ரயில் பாதை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 15 சதவீத பணிகள், வரும் 2027ம் ஆண்டிற்குள் முடிவடையும்.
சித்ரதுர்காவில் வரும் 17ம் தேதி ரயில்வே துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் கூட்டம் நடக்கிறது. இதில், எம்.பி., கோவிந்த் கார்ஜோள், ரயில்வே துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட, 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே மேம்பாலங்களின் தரத்தை பராமரிக்க அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளது.
வரும் காலத்தில், லெவல் கிராசிங் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது ரயில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
கர்நாடகாவில் 2,000 கி.மீ., வரை 'கவாச்' திட்டம் மூலம் ரயில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் ரயில் எவ்வளவு வேகமாக வந்தாலும், 50 மீட்டருக்குள் தடுத்து நிறுத்தப்படும்.
ரயில்வே பணிகளுக்கான தேர்வு, கன்னடம் உட்பட 10 மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், மற்ற மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் போல, கர்நாடகாவில் உள்ள இளைஞர்கள் ரயில்வே தேர்வு எழுதுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

