/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக கவர்னர் கெலாட் மீது மேல்சபை தலைவர் நம்பிக்கை
/
கர்நாடக கவர்னர் கெலாட் மீது மேல்சபை தலைவர் நம்பிக்கை
கர்நாடக கவர்னர் கெலாட் மீது மேல்சபை தலைவர் நம்பிக்கை
கர்நாடக கவர்னர் கெலாட் மீது மேல்சபை தலைவர் நம்பிக்கை
ADDED : ஜன 22, 2026 05:36 AM

பெங்களூரு: ''தமிழகம், கேரள கவர்னர்களை போன்று, நமது கவர்னர் நடந்து கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, மேல்ச பை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வழக்கம் போன்று, ஆண்டின் முதல் கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் துவங்கும். நாளை (இன்று) காலை 11:00 மணிக்கு, சட்டசபையில் கவர்னர் உரையாற்றுவார். இந்த உரை அடிப்படையில், இரு சபைகளிலும் விவாதங்கள் நடக்கும். இதே வேளையில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு உட்பட, அனைத்து விதமான கூட்டங்களும் நடக்கும்.
பெலகாவியில் நடந்த குளிர்க்கால கூட்டத்தின் கடைசி நாளன்று, இரவு 11:30 மணி வரை கூட்டம் நடந்தது. இம்முறையும் விவாதங்கள் முடியும் வரை, கூட்டம் ஒத்தி வைக்கப்படாது.
மாநில அரசு என்ன எழுதி கொடுக்கிறதோ, அதையே கவர்னர் வாசிக் க வேண்டும். அரசியல் சாசனத்துக்கு எதிரான அம்சங்கள் இருந்தாலும், வாசிப்பது கட்டாயம். அரசும் கூட அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட அம்சங்களை மட்டுமே, கவர்னர் உரையில் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இது அரசின் கடமையாகும்.
தமிழகம், கேரள கவர்னர்களை போன்று, நமது கவர்னர் நடந்து கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

