தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/மேற்கு தொடர்ச்சி மலையி்ன் வதே ஹல்லா அருவி!

மேற்கு தொடர்ச்சி மலையி்ன் வதே ஹல்லா அருவி!

மேற்கு தொடர்ச்சி மலையி்ன் வதே ஹல்லா அருவி!


UPDATED : நவ 12, 2026 12:00 AM

ADDED : நவ 11, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:00 AM ADDED : நவ 11, 2026 07:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: உத்தர கன்னடா மாவட்டம், சிர்சி தாலுகாவின் நில்குந்த் கிராமம் அருகில், வதே ஹல்லா அருவி உள்ளது. உஞ்சாலி அருவி, பென்னே அருவியில் இருந்து சிறிது தொலைவில் அமைந்து உள்ள இந்த அருவி, அகனாஷினி ஆற்றின் துணை நதியால் உருவாகிறது.

இப்பகுதியில் செழித்து வளரும் மூங்கிலின் பெயரில் இருந்து இந்த அருவிக்கு இப்பெயர் வந்தது. வதே என்றால் ஆற்றங்கரை மூங்கில்; ஹல்லா என்றால் குழி என்று பொருள். 100 அடி உயரத்தில் இருந்து இந்த அருவி விழுகிறது.

இந்த அருவி நான்கு நிலை கொண்டதாகும். பருவ மழையின்போது, அகனாஷினியில் இருந்து வரும் நீரின் அளவு அதிகமாக இருக்கும். எனவே, ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்த அருவியைப் பார்க்கலாம். இந்த நேரத்தில் மலைகள் பசுமையால் மூடப்பட்டிருக்கும்.

பள்ளத்தாக்கின் உச்சி முழுதும் மரங்களால் மூடப்பட்டிருப்பதால், அங்கிருந்த இந்த அருவி கண்ணுக்கு தெரியாது. அருவியின் அடிவாரத்துக்குச் செல்ல, ஏறக்குறைய, 300 அடி கீழே இறங்க வேண்டும். அந்த பாதை மிகவும் செங்குத்தாகவும், சவாலானதாகவும் இருக்கும்.

மேலும் அருவியைச் சுற்றிலும் அபாயகரமான பாறைகள் இருப்பதாலும், பாதை மிகவும் வழுக்கும் என்பதாலும், மழைக் காலத்தில் அருவியின் அடிவாரத்துக்குச் செல்வது இயலாத காரியம். அருவிக்குச் செல்லும் முன், சிர்சியிலேயே தேவையான உணவை வாங்கிக் கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us