/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாகன அபராத சலுகை 9 நாளில் ரூ.25 கோடி வசூல்
/
வாகன அபராத சலுகை 9 நாளில் ரூ.25 கோடி வசூல்
ADDED : செப் 01, 2025 10:12 PM
பெங்களூரு : போக்குவரத்து விதிமீறலுக்கு விதிக்கப்படும் அபராத தொகைக்கு, 50 சதவீதம் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டதால், பலரும் தாமாக முன் வந்து, அபராதம் செலுத்துகின்றனர். ஒன்பது நாட்களில் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகியுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் துறை வெளியிட்ட அறிக்கை:
சாலை போக்குவரத்து விதிகளை மீறிய பலரும், அபராத பாக்கி வைத்துள்ளனர். இவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், அபராத தொகை செலுத்துவோருக்கு, 50 சதவீதம் தள்ளுபடி சலுகை அளிக்க, அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது. அரசும் ஒப்புதல் அளித்ததால், அபராத தொகைக்கு 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 23ல் சலுகை செயல்படுத்தப் பட்டது. வாகன உரிமையாளர்கள் தாமாக முன் வந்து, சலுகையை பயன்படுத்தி அபராதம் செலுத்துகின்றனர்.
ஆகஸ்ட் 23 முதல் 31 வரை, 25 கோடியே 52 லட்சத்து 60,250 ரூபாய் அபராதம் வசூலானது. வரும் 12ம் தேதி வரை, சலுகை அமலில் இருக்கும். எனவே கூடுதல் தொகை வசூலாகும் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.