/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முருகா சரணரு மீதான பாலியல் வழக்கில் 26ல் தீர்ப்பு
/
முருகா சரணரு மீதான பாலியல் வழக்கில் 26ல் தீர்ப்பு
முருகா சரணரு மீதான பாலியல் வழக்கில் 26ல் தீர்ப்பு
முருகா சரணரு மீதான பாலியல் வழக்கில் 26ல் தீர்ப்பு
ADDED : நவ 20, 2025 04:18 AM

சித்ரதுர்கா: முருகா மடத்தின் முன்னாள் மடாதிபதி முருகா சரணரு மீதான பலாத்காரம் தொடர்பான முதல் வழக்கு விசாரணை முடிந்துள்ளது. 26ல் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
சித்ரதுர்காவில் உள்ள, முருகா ம டத்தின் மடாதிபதியாக இருந்தவர் முருகா சரணரு, 65. இவர் மடத்தின் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியரை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, இரண்டு மாணவியர், மைசூரின் பெண்களின் பாதுகாப்புக்காக போராடும் ஒடனாடி அமைப்பின் உதவியுடன், நஜர்பாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பின் இந்த வழக்கு, சித்ரதுர்கா நகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2022 செப்டம்பர் 1ம் தேதி முருகா சரணரு கைது செய்யப்பட்டார். 2023 நவம்பர் 16ல் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.
விசாரணையை முடித்து, சித்ரதுர்காவின் 2வது கூடுதல் மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்றமும் விசாரணையை நடத்தியது. ஒரு வழக்கின் விசாரணை, நேற்று முன்தினம் முடிவடைந்தது. வரும் 26ல் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

