/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வி.ஹெச்.பி., இணை செயலருக்கு ரூ.2 லட்சம் அபராதம் வி.ஹெச்.பி., இணை செயலருக்கு ஐகோர்ட் ரூ.2 லட்சம் அபராதம்

ADDED : அக் 09, 2025 04:22 AM

சித்ரதுர்கா : விஸ்வ ஹிந்து பரிஷத் இணை செயலர் சரண் பம்ப்வெல்லுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
சித்ரதுர்காவின் ஹிரியூரில் கடந்த மாதம் 22ம் தேதி, வி.ஹெச்.பி., எனும் விஸ்வ ஹிந்து பரிஷத் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஊர்வலத்திலும், அதே நாள் மாலை சித்ரதுர்காவில் நடந்த நிகழ்ச்சியிலும், வி.ஹெச்.பி., இணை செயலர் சரண் பம்ப்வெல் உரையாற்றவிருந்தார்.
உணர்ச்சிகளை துாண்டும் வகையில் பேசுவார் என்பதாக கூறி, சித்ரதுர்காவில் நுழைய அவருக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தை அவர் நாடினார். நிபந்தனைகளுடன் அவருக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்றம், மாவட்ட நிர்வாகத்தின் தடையை நீக்கியது.
விநாயகர் ஊர்வலத்திற்கு காலை 10:30 மணி முதல், மதியம் 12:30 மணி வரை நீதிமன்றம் அளித்திருந்தது. ஆனால் அவர் மதியம் 12:45 மணி வரை நிகழ்ச்சியில் இருந்தார். உரையாற்றினார். இந்த விஷயத்தை, சித்ரதுர்கா போலீசார், உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்றம், நிபந்தனையை மீறிய சரண் பம்ப்வெல்லுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று உத்தரவிட்டது. அபராத தொகையை மாநில சட்டசேவைகள் ஆணையம் மற்றும் போலீஸ் நலன் மேம்பாட்டு வாரியத்துக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.