தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அசைவ விருந்து கொடுத்தால் அபராதம் கிராம தலைவர்கள் அதிரடி உத்தரவு

அசைவ விருந்து கொடுத்தால் அபராதம் கிராம தலைவர்கள் அதிரடி உத்தரவு

அசைவ விருந்து கொடுத்தால் அபராதம் கிராம தலைவர்கள் அதிரடி உத்தரவு


UPDATED : அக் 09, 2026 12:00 AM

ADDED : அக் 08, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 12:00 AM ADDED : அக் 08, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: ஷிகாரிபுரா தாலுகாவின், ஹரடி கிராமத்தில் விருந்து ஏற்பாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், சாப்பிடுவோருக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிப்பதாக கிராம தலைவர்கள் எச்சரித்து உள்ளனர்.

பொதுவாக திருமணம் முடிந்த பின், அசைவ விருந்துகள் நடப்பது வழக்கம். ஆடம்பர விருந்துக்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவிடுகின்றனர். கிராமங்களில் ஆடம்பரமாக விருந்து கொடுப்பது, கவுரவ பிரச்னையாக கருதப்படுகிறது. இத்தகைய விருந்துகள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு, பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே மழை பற்றாக்குறையால் வறட்சி நிலவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையிலும், கடன் வாங்கி விருந்துகளை நடத்தி, கடனாளியாகின்றனர்.

இதை கவனித்த ஷிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுரா தாலுகாவின் ஹரகி கிராமத்தின் பெரியவர்கள் சேர்ந்து ஆலோசித்து, ஆடம்பர விருந்துக்கு தடை விதித்துள்ளனர்.

மீறி விருந்து ஏற்பாடு செய்தால், ஒரு லட்சம் ரூபாயும், இதில் பங்கேற்று உணவு சாப்பிடுவோருக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

கிராம கமிட்டி தலைவர் சேகர்ராஜு கூறியதாவது:

விருந்துக்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவிடுகின்றனர். பெண் வீட்டார் கடன் வாங்கி, அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். விருந்து பெயரில் குடும்பங்கள், கடனாளியாவதை தவிர்க்கவும், எளிமையான திருமணங்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us