ADDED : செப் 27, 2025 04:56 AM

தசராவையொட்டி, மைசூரில் வின்டேஜ் கார் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விதவிதமான கார்களை சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.
மைசூரின், ஹெப்பால் தொழிற்பகுதியில், தொழிற்சாலை வைத்துள்ளவர் கோபநாத். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக, தசரா நேரத்தில் வின்டேஜ் கார்களின் கண்காட்சியை ஏற்பாடு செய்கிறார். இது சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.
இம்முறையும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் 50க்கும் மேற்பட்ட அபூர்வமான வின்டேஜ் கார்கள், 40க்கும் மேற்பட்ட பைக்குகள் இடம் பெற்றுள்ளன. 1909 முதல் 1970ம் ஆண்டு வரையிலான கார்கள், பைக்குகளை இங்கு காணலாம்.
ஒவ்வொன்றும் தனி சிறப்பு கொண்டவை. இன்றைக்கும் நல்ல நிலையில் இயங்குகின்றன. தசரா நேரத்தில் மட்டுமே, இத்தனை அபூர்வ கார்களை, ஒரே இடத்தில் பார்க்க முடியும்.
தசரா நிகழ்ச்சிகளை காண, மைசூரு வந்துள்ள சுற்றுலா பயணியர், வின்டேஜ் கார் கண்காட்சியை பார்த்து ரசிக்கின்றனர்.