/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆலந்த் தொகுதி ஓட்டு மோசடி வாக்காளர் அட்டைகள் சிக்கின
/
ஆலந்த் தொகுதி ஓட்டு மோசடி வாக்காளர் அட்டைகள் சிக்கின
ஆலந்த் தொகுதி ஓட்டு மோசடி வாக்காளர் அட்டைகள் சிக்கின
ஆலந்த் தொகுதி ஓட்டு மோசடி வாக்காளர் அட்டைகள் சிக்கின
ADDED : அக் 16, 2025 11:24 PM
கலபுரகி: கலபுரகி மாவட்டம் ஆலந்த் தொகுதியில் 6,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள், ஆன்லைன் மூலம் நீக்க முயற்சி நடந்ததாகவும், வாக்காளர்களின் உறவினர்கள் கண்டுபிடித்ததால் தடுத்து நிறுத்தப்பட்டதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து ஓட்டுத்திருட்டு புகார்களையும் விசாரிக்க ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட எஸ்.ஐ.டி., சிறப்பு புலனாய்வுக்குழுவை, மாநில அரசு அமைத்தது.
இந்த குழுவினர் மாவட்டத்தில் உள்ள ஐந்து இடங்களில் சோதனை நடத்தினர். இதில், ரோஜா லே - அவுட்டில் உள்ள அஷ்பக், ஜுன்ஜும் காலனியில் உள்ள நதீம், அக்ரம், ராம்நகர் லே - அவுட்டில் உள்ள அஸ்லம், யாதுல் காலனியில் உள்ள முகமது ஜுனைத் ஆகியோரின் வீடுகளில் நேற்று முன் தினம் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதில், அக்ரமின் வீட்டில் இருந்து ஏராளமான வாக்காளர் அட்டைகள், 15 மொபைல் போன்கள், 7 மடிக்கணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் அனைவரும் 2023ல் 'கால் சென்டரில்' ஒரே இடத்தில் வேலை செய்துள்ளனர். ஆவணங்கள் அனைத்தும் சரிபார்ப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.