தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போர் ஒத்திகை! கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் நாளை நடக்கிறது

போர் ஒத்திகை! கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் நாளை நடக்கிறது

போர் ஒத்திகை! கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் நாளை நடக்கிறது


ADDED : மே 09, 2025 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 11:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாண்டியா: கர்நாடகா - தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும், கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் நாளை போர் ஒத்திகை நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. “சைரன் ஒலியை கேட்டு அணையை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பீதி அடைய வேண்டாம்,” என, மாண்டியா மாவட்ட கலெக்டர் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதால், அண்டை நாடான பாகிஸ்தான் மீது நம் நாடு கடும் கோபத்தில் உள்ளது. பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நம் நாட்டு முப்படைகள் தாக்குதல் நடத்தின. இரு நாடுகளின் எல்லையிலும் போர் பதற்றம் நிலவுகிறது.

போரை எதிர்கொள்ளும் வகையில் போர் ஒத்திகை நடத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த 7ம் தேதி பெங்களூரில் 32 இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்பட்டது.

வட மாவட்டமான ராய்ச்சூரின் சக்திநகரில் உள்ள அனல்மின் நிலைய ஹெலிபேட் பகுதியில், நேற்று போர் ஒத்திகை நடத்தப்பட்டது. கர்நாடகா - தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும், கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் நாளை போர் ஒத்திகை நடக்க உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மாண்டியா மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

ராணுவ உத்தரவு


போர் ஒத்திகை தொடர்பாக பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் மாண்டியா கலெக்டர் குமார் நேற்று ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி:

மத்திய அரசின் உள்துறை, ராணுவம், கர்நாடகா அரசின் உத்தரவின்பேரில் வரும் 11ம் தேதி, கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் போர் ஒத்திகை நடத்த உள்ளோம். மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை ஒத்திகை நடக்கிறது.

பெங்களூரில் இருந்து தீயணைப்புப் படை அதிகாரிகள், ஊழியர்கள் வருகின்றனர்.

வருவாய், போலீஸ், சுகாதாரம் உட்பட பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

சரியாக மாலை 4:00 மணிக்கு சைரன் ஒலிக்கப்படும். அணையை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும், மக்கள் பீதி அடைய வேண்டாம். போர் ஒத்திகையை மத்திய அரசு மூன்று வகைகளாக பிரித்துள்ளது.

இரண்டாவது வகையில் அணைகள், தொழிற்பேட்டை பகுதிகள் வருகின்றன. கே.ஆர்.எஸ்., முக்கிய அணை என்பதால் போர் ஒத்திகை நடத்த உத்தரவு வந்தது.

அணையில் ஏற்கனவே கர்நாடக தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போர் ஒத்திகை நடத்துவது பற்றி அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளோம்.

சைரன் சத்தம்


அணையின் நுழைவு வாயில் உட்பட மூன்று பகுதிகளில், போர் ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ்., மற்றும் பிருந்தாவன் பார்க் வரும், சுற்றுலா பயணியருக்கு எந்த தடையும் இல்லை.

ஆனால் போர்க்கால ஒத்திகை நடக்கும்போது, யாரும் பீதி அடைந்து விட வேண்டாம் என்பது மட்டும் என் வேண்டுகோள்.

இவ்வாறு அவர் கூறினார்.

திடீரென சைரன் சத்தம் கேட்கும்போது, மக்கள் பயந்து விட கூடாது என்பதற்காக தான், 'யாரும் பீதி அடைய வேண்டாம்' என, கலெக்டர் குமார் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us