/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காமராஜர் பெயரில் வார்டு மாஜி கவுன்சிலர் நன்றி
/
காமராஜர் பெயரில் வார்டு மாஜி கவுன்சிலர் நன்றி
ADDED : அக் 18, 2025 04:45 AM

பெங்களூரு: பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டுக்கு, தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரை சூட்டியதற்கு, மாநில அரசுக்கு, பாரதிநகர் வார்டு பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் எம்.பாரி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ், புதிதாக 5 மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் சென்ட்ரல் மாநகராட்சியில் 63 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஐந்தாவது வார்டுக்கு தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்காக சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், பா.ஜ., - எம்.பி., மோகன், காங்கிரஸ் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 1977ல் பெங்களூரு மாநகராட்சியில் கவுன்சிலர்களாக இருந்த மாசே, பூசலிங்கம் ஆகியோர் முயற்சியால், எம்.ஜி.ரோடு மற்றும் கமர்ஷியல் தெரு பகுதிக்கு உட்பட்ட ரோடுக்கு, காமராஜர் பெயர் சூட்டப்பட்டது. அந்த ரோடு தற்போதும் பிரபலமாக உள்ளது.
காமராஜர் மறைந்து, 50 ஆண்டுகள் ஆனாலும், ஒரு தலைவரின் சேவை மக்கள் மன்றத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான், அவர் பெயரில் உள்ள ரோடு, கட்டடம், வார்டு ஆகியவை.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.